அடுத்த வருடம் ரஜினி சார் படம் - தனுஷ் பேட்டி

அடுத்த வருடம் ரஜினி சார் படம் - தனுஷ் பேட்டி

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2016 (12:14 IST)
கொடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிருபர்களின் கேள்விகளுக்கு தனுஷ் பதிலளித்தார். அவருடைய பேட்டியிலிருந்து...


 
 
முதல் முதலில் இரட்டை வேடம்...?
 
நான் இரட்டை வேடங்களில் நடித்துள்ள முதல் படம் இது. இதில் நடித்த பிறகு இரட்டை வேடங்களில் நடித்தவர்கள் மீது மரியாதை வந்தது.
 
கொடி என்ன மாதிரியான படம்...?
 
கொடி அரசியல் சார்ந்த படம். ஆனால் அரசியலை கிண்டல் செய்வது போல் இருக்காது.
 
முதல் முதலில் த்ரிஷா...?
 
ஆடுகளம் படத்தில் த்ரிஷாவுடன் நடிக்க வேண்டியது. பல காரணங்களால் அது முடியாமல் போனது. இதில் த்ரிஷாவின் கதாபாத்திரம் அழுத்தமானது, சிறப்பாக நடித்திருக்கிறார்.
 
இயக்குனர் வேலை எப்படி போகிறது...?
 
பவர் பாண்டியை இயக்கிய பிறகுதான், சினிமாவில் கஷ்டமான வேலை இயக்குனர் வேலைங்கிறதை புரிந்து கொண்டேன். 

ராஜ்கிரண்...?
 
சில கதைகள் சரியான நபரை போய் சேராது. பவர் பாண்டி கதை சரியாக ராஜ்கிரண் சாரை போய் சேர்ந்திருக்கிறது. அவர் சிறந்த மனிதர், நடிகர்.
 
ராஜ்கிரணுக்கு என்ன மாதிரியான வேடம்...?
 
சண்டைக் கலைஞராக இதில் அவர் நடிக்கிறார். 
 
நாயகி...?
 
இன்னும் முடிவாகவில்லை.
 
ரஜினி படம்...?
 
ரஜினி சார் நடிக்கும் படத்தை தயாரிப்பதை மிகப்பெரிய கௌரவமாகவும், பெருமையாகவும் கருதுகிறேன். அடுத்த வருடம் படத்தை தொடங்கலாம் என்றிருக்கிறோம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜனநாயகனில் அரசியல் வசனங்கள் கட்!.. சென்சாரில் நடந்தது என்ன?..

சூர்யாதான் எனக்கு ரோல் மாடல்!.. நெகிழ்ந்து பேசிய சிரஞ்சீவி...

மும்பையில் வீடுகளை விற்ற பிரபுதேவா!.. இவ்வளவு கோடியா?...

Dhurandhar 2 திரைப்படத்தை தமிழில் மட்டும் பார்க்க முடியாதா? என்ன காரணம்?

Weight loss நல்லது தான்.. அதுக்காக இப்படியா? பாடகியின் பரிதாப நிலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments