Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தப்பு செய்து மாட்டியிருக்கேன் - ஓவியா ஓபன் பேட்டி

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2017 (13:19 IST)
மலையாளத்தில் அறிமுகமாகி, தமிழ் வழியாக இப்போது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார் ஓவியா. சீனி  படத்துக்காக சென்னை வந்தவரிடம் பேசியதிலிருந்து...

 
உங்களைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்க...?
 
நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கேரளாவிலுள்ள திருச்சூர். பி.ஏ. ஆங்கிலம் படிக்கும் போதே மாடலிங் செய்திருக்கேன்.  அப்படிதான் நடிக்க வாய்ப்பு வந்தது.
 
உங்க முதல் படம் களவாணியா?
 
இல்லை. மலையாளத்தில் 3 படங்களில் நடித்த பிறகே களவாணியில் வாய்ப்பு கிடைத்தது. நான் 2007 -லேயே நடிக்க  ஆரம்பித்தேன். 2010 -இல்தான் களவாணியில் நடித்தேன்.
 
உங்கள் இயற்பெயரே ஓவியாதானா?
 
இல்லை. பெற்றோர் வைத்த பெயர், ஹெலன். சற்குணம்தான் சினிமாவுக்காக ஓவியாங்கிற பெயரை வைத்தார். அதுவே  பிரபலமாகிவிட்டது.
 
யாமிருக்க பயமேன், ஹலோ நான் பேய் பேசுகிறேன்னு தொடர்ச்சியா பேய் படங்களில் நடித்தீர்களே... பேய்க்கு பயப்படுவீர்களா?
 
இல்லாத ஒரு விஷயத்துக்கு ஏன் பயப்படணும்? பயம் இல்லாமதான் இந்தப் படங்களில் நடித்தேன்.
 
நடிப்பு தவிர உங்க ஹாபி என்ன?
 
மாடலிங் பண்ணணுங்கிறது என்னோட ஆசை. அதேபோல நிறைய படிக்கணுங்கிற விருப்பமும் உண்டு.
 
தப்பு செய்து மாட்டிக் கொண்ட அனுபவம் உண்டா?
 
பத்தாவது படிக்கும் போது ப்ராக்ரஸ் கார்டில் அப்பாவின் கையெழுத்தை போட்டு மாட்டியிருக்கேன்.
 
தமிழில் உங்களை அதிகமாக பார்க்க முடியவில்லையே?
 
தமிழில் ஒரு படம் நடிக்கிறேன். தவிர கன்னடம், தெலுங்கிலும் ஒவ்வொரு படம் நடிக்கிறேன். இந்த வருடம் நிறைய தமிழ்ப்  படங்களில் என்னை நீங்க எதிர்பார்க்கலாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலான ‘கண்ணாடிப் பூவே’ பாடல்.. ரெட்ரோ செகண்ட் சிங்கிள் பாடல் எப்போது?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

தமிழக மக்கள்தான் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள்… ஜோதிகா நெகிழ்ச்சி!

இதெல்லாம் ஒரு படமா?... மக்கள் உன் மீதுதான் கோபத்தில் இருக்கிறார்கள் – தனுஷை விமர்சித்த ராஜன்!

கவிதை எழுத A I பயன்படுத்தினேன்.. அதிருப்தியை வெளியிட்ட வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments