நானும் படித்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது : நடிகர் யோகிபாபு

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (18:41 IST)
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் யோகிபாபு. இவர் தற்போது பா,ரஞ்சித் தயாரித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் பரியேறும் பெருமாள் என்ற படத்தில் சட்டக் கல்லூரி மாணவராக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் நடித்த தனது அனுபவம் பற்றி அவர் கூறும் போது:

”பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன். இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக நடித்தது மறக்க முடியாத அனுபவம். இதில் நடித்தபோது, 32 நாட்கள் கல்லூரியிலே வலம் வந்தது நானும் படித்திருக்கலாமோ என்ற எண்ணத்தை உண்டாக்கியது. காமெடி காட்சிகள் மட்டுமல்லாமல் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்.

நடித்து முடித்து மானிட்டரைப் பார்க்கும்போது,  இந்த மாதிரியான காட்சிகளில் எனக்கும் நடிக்க வருகிறதே என்று தோன்றியது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினிகாந்தின் 'படையப்பா' இன்று ரீரிலீஸ்.. அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல்..!

அமைச்சர் கே.என்.நேரு மீது இன்னும் வழக்கு பதியவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு!

மகள் நிச்சயதார்த்தம் ஜாலியா போனாலும் சரண்யாவுக்கு இப்படியொரு வருத்தமா? போட்டுடைத்த கணவர்

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்த நடிகை திடீர் தற்கொலை.. குடும்ப பிரச்சனையா?

‘முதல்வன்’ சூட்டிங் மட்டும்தான் ரகுவரன் கரெக்ட் டைமுக்கு போனாரு.. காரணத்தை சொன்ன ரோகிணி

அடுத்த கட்டுரையில்
Show comments