Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த்ரிஷாவுக்கும் எனக்கும் மோதல் என்பது பொய் - ஹன்சிகா பேட்டி

Webdunia
வெள்ளி, 29 ஜனவரி 2016 (13:41 IST)
ஹன்சிகா நடித்துள்ள அரண்மனை 2 இன்று வெளியாகியுள்ளது. உடன் த்ரிஷா, பூனம் பஜ்வா ஆகியோரும் நடித்துள்ளனர்.

அரண்மனை பெயருக்கு ஹன்சிகா ஒரு பார்ட்னர் போல, அவர் இல்லாமல் இந்தப் படம் இல்லை என்று சுந்தர் சி. சொன்னதிலிருந்தே, அரண்மனை 2 படத்தில் ஹன்சிகாவின் முக்கியத்துவம் என்ன என்பது தெரிந்திருக்கும். 


 


படம் வெளியானதை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் ஹன்சிகா. 

படப்பிடிப்பின்போது உங்களுக்கும், த்ரிஷாவுக்கும் மோதல் இருந்து வந்ததாக கூறப்பட்டதே? 

பொய். நானும், த்ரிஷாவும் நல்ல தோழிகள். இரண்டு பேரும் ‘டுவிட்டரில்’ எங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை என்று இருவருமே ‘டுவிட்’ செய்து இருக்கிறோம். த்ரிஷா எனக்கு சீனியர். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவருடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி. 

இரண்டு பேரும் போட்டி போட்டு கவர்ச்சியாக நடித்திருப்பதாக பேசப்படுகிறதே...உண்மையா? 

உண்மை அல்ல. த்ரிஷா வேடம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால், என் வேடத்தில் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. குடும்பப்பாங்காகவே என்னை காட்டியிருக்கிறார்கள். 

இரண்டு பெரிய கதாநாயகிகள் இணைந்து நடிக்கும்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விடுமோ என்று டைரக்டர் பயப்படுவார். அந்த பயம் சுந்தர் சி.க்கு இருந்ததா? 

சுந்தர் சி. திறமையான டைரக்டர் மட்டுமல்ல. நல்ல மனிதரும் கூட. வெளிப்படையாக பேசுபவர். அவருக்கு அந்த பயம் இருந்ததாக தெரியவில்லை. எங்கள் இருவரையும் அவர் சமமாகவே நடத்தினார். 

கர்ப்பிணி பெண்ணாக நடித்த அனுபவம் எப்படியிருந்தது? 

மிகவும் சிரமப்பட்டேன். முதலில் 2 மாத கர்ப்பிணியாக நடிக்கும்படி என்னிடம் டைரக்டர் சுந்தர் சி. கூறினார். இரண்டு மாத கர்ப்பம் என்பதை ஆறு அல்லது ஏழு மாத கர்ப்பமாக வைத்துக் கொள்ளலாமா என்று நான் கேட்டேன்.

அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து 7 மாத கர்ப்பிணியாக நடித்தேன். கர்ப்பிணி பெண்ணாக நடிப்பது சுலபம் அல்ல. நடை உடை பாவனைகளில் மாற்றம் தெரிய வேண்டும். அதற்காகவே நான் சிரமப்பட்டேன். படம் பார்த்து விட்டு சுந்தர் சி. என் நடிப்பை பாராட்டினார். 

முன்பை விட மிகவும் மெலிந்து காணப்படுகிறீர்களே...அதன் ரகசியம் என்ன? 

ஆரோக்கியமான உணவை சாப்பிடுகிறேன். படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் ‘ஸ்குவாஷ்’ விளையாடுகிறேன்.தினமும் ‘யோகா’ செய்கிறேன். வேறு எந்த ரகசியமும் இல்லை.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments