Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம் - காஜல் அகர்வால்

Webdunia
ஞாயிறு, 30 அக்டோபர் 2016 (13:57 IST)
மீண்டும் முன்னணி இடத்தை நோக்கி நகர்கிறார், காஜல் அகர்வால். முக்கியமாக சிரஞ்சீவியின் 150-வது படத்தில் இவர்தான் நாயகி. நடிகைகளின் ஆடைகள் குறித்தும், கவர்ச்சி குறித்தும் அவர் அளித்த பேட்டியின் விவரங்கள் உங்களுக்காக...
 

 
நடிகைகள் கவர்ச்சி காட்ட வேண்டியது அவசியமா?
 
நடிகைகளுக்கு கவர்ச்சி அவசியம்தான். சில நேரம் அதிகப்படியான கவர்ச்சி தேவைப்படுகிறது. எனவேதான் நடிகைகள் ஆடை, அலங்காரங்களின் வழியாக தங்களை கவர்ச்சியாக காண்பிக்கிறார்கள்.
 
எல்லை மீறிய கவர்ச்சியை ஆதரிக்கிறீர்களா?
 
நான் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் அதிலும் ஒரு எல்லை வைத்திருக்கிறேன். அந்த எல்லையைத் தாண்டி கவர்ச்சி காட்டுவதில்லை.
 
ஒரு பாடலுக்கு நடனம் என்ற பெயரில் நாயகி நடிகைகளே கவர்ச்சியில் இறங்குகிறார்களே?
 
நானும் ஜனதா கேரெஜ் தெலுங்குப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறேன். அதிலும் நான் கவர்ச்சியில் எல்லை மீறவில்லை. 
 
உங்களுக்கு எந்த மாதிரியான உடை பிடிக்கும்?
 
என்னை அதிகமும் படங்களில் மாடர்ன் உடையில் பார்த்திருப்பீர்கள். எனக்கு நமது கலாச்சார உடையான சேலையும் பிடிக்கும். 
 
பொதுவாக இந்திப் பெண்களுக்கு எந்த உடை அழகு என்று நினைக்கிறீர்கள்?
 
சேலைதான் பெண்களுக்கு அழகு.
 
புடவையில் கவர்ச்சி இல்லை என்கிறீர்களா?
 
புடவையிலும் கவர்ச்சி உண்டு. அதிலும் கவர்ச்சியாக தோன்ற முடியும். 
 
உடை அணியும் போது பெண்கள் எதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
 
கவர்ச்சியாக இருக்கிறோமா என்பதைவிட, கண்ணியமாகவும், கவுரவமாகவும் இருக்கிறோமா என்றுதான் பார்க்க வேண்டும். சினிமாவிலும், பொது இடத்திலும் நான் உடையணியும் போது அதைத்தான் கவனத்தில் கொள்வேன்.
 
வயதான நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று சொன்ன நீங்கள் சிரஞ்சீவியுடன் நடிக்கிறீர்களே...?
 
சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டாருடன் அதுவும் அவரது 150-வது படத்தில் நடிப்பதை கவுரவமாக கருதுகிறேன். கைதி நம்பர் 150 படம் சிறப்பாக வளர்ந்து வருகிறது. 
 
ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா?
 
அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் எந்த நடிகை வேண்டாம் என்று சொல்வார்? அது லைப் டைம் வாய்ப்பு, தவறவிட மாட்டேன்.

திடீரென மொட்டையடித்த ‘காதல்’ பட நடிகை.. சாமியாராக போகிறாரா?

கோட் படத்தில் டி ஏஜிங் பணிகளில் தாமதம்… ரிலீஸ் பாதிப்பா?

முதல் படத்தை முடிக்கும் முன்னே இன்னொன்னா?… டிடிஎஃப் வாசனின் அடுத்த பட டைட்டில்!

தாமதம் ஆகிறதா விஜய்- ஹெச் வினோத் திரைப்படம்?

சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தில் இணைந்த விஜய்யின் தம்பி!

அடுத்த கட்டுரையில்