ஒரு வெறியோடத்தான் 'ஈட்டி' படம் பண்ணுனேன் - நடிகர் அதர்வா பேட்டி

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2015 (11:17 IST)
சிக்ஸ்பேக் வைத்து, அசல் விளையாட்டு வீரராகவே மாறியிருக்கிறார், நடிகர் அதர்வா.


 

 
படம், ஈட்டி. வெற்றிமாறனின் அசிஸ்டெண்ட் ரவிஅரசு இயக்கியிருக்கும் இந்தப் படம், அதர்வா நம்பியிருக்கும் படம் என்றும் சொல்லலாம். படம் குறித்த அதர்வாவின் பேச்சில் நம்பிக்கை தெரிகிறது.
 
இந்தப் படம் எப்படி டேக் ஆஃப் ஆனது, சொல்ல முடியுமா?
 
எனக்கு முதல் முதலா ஈட்டியோட ஸ்கிரிப்டை தாணு சார்தான் அனுப்பினார். ஸோ அவருக்குதான் முதல்ல தாங்க்ஸ் சொல்லணும். ஒருசில காரணங்களால அது அவரோட, வி கிரியேஷன்ல டேக் ஆஃப் ஆகலை.
 
அடுத்து வெற்றிமாறன் சார் கூப்பிட்டு, என்னோட அசிஸ்டெண்ட் ரவிஅரசு ஒரு கதை சொல்லியிருப்பார், கேட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன் என்றார். ஆமா, கதை நல்லாயிருக்குதுன்னு சொன்னேன். வெற்றி சாரும், மைக்கேல் சாரும் இந்தப் படத்தை எடுப்பதா இருந்தது. பிறகு படம் மைக்கேல் சார் கைக்கு வந்தது. 
 
படம் முடிந்துவிட்டது. இப்போது எப்படி ஃபீல் பண்றீங்க?
 
நான் ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கேன். இந்த ரோல் கொடுத்த ரவி சாருக்கும்,
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க...

படம் கொடுத்த மைக்கேல் சாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
 
ஈட்டியில் விளையாட்டு வீரராக நடிச்சிருக்கீங்க. அதற்கான ப்ரிப்ரேஷன் பற்றி சொல்ல முடியுமா?
 
சிலர் சொல்வாங்க, ரத்தம் சிந்தி படம் பண்ணணும்னு. இந்தப் படத்துல உண்மையாகவே அப்படித்தான் நடந்தது. கிட்டத்தட்ட 13, 14 மாதங்கள் ஒரு சிவியர் டயட்ல இருந்து, ஒரு வெறியோடத்தான் இந்தப் படத்தை பண்ணுனேன்.


 

 
இரும்பு குதிரையிலிருந்து சண்டிவீரன் வித்தியாசமான கதை. அதிலிருந்து மாறுபட்டது ஈட்டி. இந்த வெரைட்டி எப்படி அமைகிறது?
 
எனக்கு டிபரண்ட் ஜானர்ல படம் பண்ண ரொம்பவும் பிடிக்கும். அதுதான் காரணம். அந்த வகையில் இந்தப் படம் கொடுத்த ரவி சாருக்கு ரொம்ப ரொம்ப நன்றி. 
 
படத்தில் பாடல்கள் எப்படி வந்திருக்கு?
 
நான் பண்ணுன படங்களில் 90 பர்சன்டேஜ் ஜீ.வி.பிரகாஷ்தான் மியூசிக். லக்கிலி நான் பண்ணுன எல்லாப் படங்களிலும் ஆல்பங்கள் சூப்பர்ஹிட்டாகியிருக்கு. அந்தவகையில் இந்த படத்தோட ஆல்பமும் சூப்பர்ஹிட்டாகும்னு நம்பிக்கை எனக்கு இருக்கு.
 
உங்களுடன் நடித்தவர்கள் பற்றி...?
 
என்னோட கோ ஸ்டார் ஸ்ரீதிவ்யா, நரேன் எல்லாருக்கும் என்னோட நன்றி. இந்தப் படத்தை வொண்டர்ஃபுல் மூவியா உருவாக்குனதில் இவங்க எல்லோருடைய பங்கும் இருக்கு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

300 படம் நடிச்சும் பெருசா தேரலயே!.. சிம்பு படத்தில் வாய்ப்பு கேட்ட யோகிபாபு!...

மீண்டும் தள்ளிப்போன ஜனநாயகன் ரிலீஸ் தேதி!.. விஜய் ஃபேன்ஸ் அப்செட்..

19 ஆண்டுகளுக்கு முன் தீபிகா படுகோனேவுக்கு நடந்த கொடுமை.. இப்போது பழிதீர்த்த கணவர் ரன்வீர்சிங்..!

விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் - விமர்சனம்

பாலிவுட் திரையில் தாவூத் இப்ராஹிம்: 'துரந்தர் 2' படத்தின் யதார்த்த சித்தரிப்பு

Show comments