Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த ஆளுக்கு திமிரு.... வடிவேலு இடத்தை யோகிபாபு கைப்பற்றியது இப்படித்தான்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (14:30 IST)
வடிவேலு சிம்புதேவன் காம்போவின் ஹிட் காம்போவான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.

ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் படமும் கைவிடப்பட்டது. இதனால் லைகா நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு வடிவேலு ஈடு செய்யவேண்டும் என்று அவருக்கு ரெட் விதிக்கப்பட்டது. இப்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
 
இதையடுத்து அவர் இப்போது வரிசையாக படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். வடிவேலுவின் மறுவருகை ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் திரையுலகக் கலைஞர்களுக்குமே கூட உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. 
 
இந்நிலையில் வடிவேலு குறித்த விஷயம் ஒன்றை பிரபல பத்திரிக்கையாளர் வெளிப்படையாக கூறி ஷாக் கொடுத்துள்ளார். அதாவது பேய்மாமா படத்தில் முதலில் நடிக்க வடிவேலுவை தான் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால், அந்த சமயத்தில் வடிவேலு திமிரில் ஆடிக்கொண்டிருந்ததால் இதுவரை வைத்து படம் எடுத்தால் அந்த படமே வெளிவராது என எண்ணி வடிவேலுவுக்கு பதிலாக யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டார். வடிவேலு இல்லாத அந்த சில வருடம் தான்  யோகி பாபுவின் வாழ்க்கையே மாற்றி அமைத்தது. இனி யோகியை யாரும் அசைக்கமுடியாத அளவிற்கு அவரின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே போனாலும் பணிவு பல மடங்கு உயர்கிறது என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சல்மான் கானை வைத்து படம் எடுப்பது கஷ்டம்… சிக்கிக்கொண்ட முருகதாஸ்- பிரபல தயாரிப்பாளர் கருத்து!

இசைஞானி இல்லை… அவர் இசை இறைவன் – இளையராஜாவுக்கு புதுப் பட்டம் சூட்டிய சீமான்!

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

அடுத்த கட்டுரையில்
Show comments