Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொட்டையடிக்கவும் தயங்க மாட்டேன் - ஒரு நடிகையின் ஆவேசம்

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2010 (19:37 IST)
WD
உற்று கவனித்தால் மட்டுமே தெ‌ரியக் கூடிய வேடத்தில்தான் இதுவரை நடித்து வந்தார் எலிசபெத். தம்பி உடையான், தம்பி அர்ஜுனா, மாத்தியோசி, இலக்கணம், க ோ‌ ரிப்பாளையம், ஈரம், கல்லூ‌ர ி, கற்றது களவு... இவையெல்லாம் எலிசபெத் நடித்தப் படங்கள். என்றாலும் இவரை பலருக்கும் தெ‌ரியப்படுத்தியது பூபதி பாண்டியனின் காதல் சொல்ல வந்தேன்.

இந்தப் படத்தில் பாலா‌ஜியின் அம்மாவாக நடித்திருந்தார் எலிசபெத். இந்த வேடத்துக்காக பாராட்டுகள் கிடைத்ததுதான் இவரது இப்போதைய ஒரே சந்தோஷம். அவருடனான உரையாடலிலிருந்து.

நீங்கள் மலையாளி என்பது உண்மைதானா...?

என்னுடைய பூர்வீகம் கேரளா. பிறந்தது அங்கு என்றாலும் நான் வளர்ந்தது படித்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான்.

தமிழ்நாட்டில் என்றால்...?

காஞ்சீபுரத்தில்.

சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?

நான் படித்துவிட்டு காஞ்சிபுரம் பக்கத்தில் ஆச ி‌ ரியராக வேலை பார்த்து வந்தேன். அப்போது படப்பிடிப்புக்காக வந்தவர்கள் என்னைப் பார்த்துவிட்டு நடிக்க அழைத்தார்கள். முதலில் எனக்கு ஆச்ச‌ரியமாக இருந்தது. வீட்டில் நடிக்க சம்மதித்ததால் நடிகையானேன்.

சின்னச் சின்ன வேடங்களில்தானே நடிக்கிறீர்கள்?

முதலில் சின்ன வேடம்தான் கிடைத்தது. அதற்காக வருத்தப்படவில்லை. போகப் போக நல்ல பெ‌ரிய வேடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது நிறைவேறி வருகிறது.

இதுபோன்ற சின்ன வேடங்களில் நடிப்பது திருப்தியளிக்காதே?

இப்போது நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள வேடங்கள் கிடைக்கிறது. ஒரு படத்தில் நடித்த பிறகு, அடுத்தப் படத்தில் உங்களுக்கு பெ‌ரிய கேரக்டர் தர்றேன் என்று இயக்குனர்கள் சொல்வதை எனது நடிப்புக்கு கிடைத்த ம‌ரியாதையாக நினைக்கிறேன்.

காதல் சொல்ல வந்தேன் பற்றி சொல்லுங்கள்...?

இந்தப் படத்தில் தாய் சொல்லை தட்டாத பாலா‌ஜியின் அம்மாவாக நடித்திருப்பேன். இந்தப் படத்தை பார்த்தவர்கள் அந்த அம்மா கேரக்டரை வெகுவாக பாராட்டினார்கள். பூபதி பாண்டியன் சாருக்குதான் இதற்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.

இப்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?

மதில் மேல் பூனை, அல்லி நகரம், வண்ணத்தேர், கருப்பர் நகரம், 365 காதல் கடிதங்கள், திருப்பூர் அப்புறம் ஆர்யாவின் சிக்கு புக்கு என்று அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். இந்தப் படங்களில் எல்லாம் எனக்கு நல்ல கேரக்டர்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படங்களுக்குப் பிறகு நானும் பேசப்படுகிற நடிகையாவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எந்த மாத ி‌ ர ி வேடங்களில் நடிக்க ஆசை?

அக்கா, அண்ணி, அம்மா என்று எந்த வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். கேரக்டருக்காக மொட்டை அடிக்கச் சொன்னாலும் அடிப்பேன். நடிப்பு மீது எனக்கு அந்தளவு வேட்கை இருக்கிறது. இத்தனை படங்களில் நடித்தாலும் இன்னமும் ஒரு புதுமுகத்தைப் போல்தான் ஒவ்வொரு படத்திலும் பயபக்தியுடன் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments