Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச தரத்திற்கு விளையாடவில்லை- தோனி

Webdunia
புதன், 17 ஜூன் 2009 (11:34 IST)
2007 ஆம் ஆண்டு 20- 20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி நேற்று இரண்டாவது உலகக் கோப்பை கடைசி லீக் போட்டியிலும் வெற்றி பெற முடியாமல் சூப்பர் 8 சுற்றில் 3 போட்டிகளிலும் தோல்வி தழுவியதற்கு சர்வதேச தரத்தில் விளையாடாததே காரணம் என்று இந்திய அணித் தலைவர் தோனி தெரிவித்துள்ளார்.

" இது போன்ற ஆட்டத்தை எங்களிடமிருந்து யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், நாங்கள் நன்றாக விளயாடுவோம் என்றே அனைவரும் எதிர்பார்த்திருப்பார்கள், ஒரு அணி என்ன சாதிக்க முடியும் என்பது அல்ல பிரச்சனை, என்ன சாதிக்கிறது என்பதுதான் முக்கியம்.

அனைத்து வீரர்களும் நன்றாக விளையாடிய போட்டியே இந்த உலகக் கோப்பையில் அமையவில்லை, ஒரு போட்டியில் 2 பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினால் மீதி 3 பேர்கள் மோசமாக வீசுகின்றனர், பேட்டிங்கில் ஒருவர் நன்றாக ரன்கள் எடுத்தால் மற்றவர்கள் சொதப்புகின்றனர். மொத்தத்தில் ஒரு அணியாக திரண்டு சர்வதேச தரத்திற்கு விளையாடவில்லை என்று தெரிகிறது" என்று கூறுகிறார் தோனி.

விரேந்தர் சேவாக் காயம் பற்றி குறிப்பிட்ட தோனி, "இந்தியாவில் முதல் ஸ்கேன் எடுக்கும்போது அவருக்கு காயம் அவ்வளவாக இல்லை, ஆனால் அடுத்த முறை ஸ்கேன் செய்யும் போது தசை நார் கிழிந்திருப்பது தெரிந்தது. இந்த ஒவ்வொரு விவரத்தையும் நாம் வெளிப்படையாக கூறிக் கொண்டிருக்க முடியாது, ஏனெனில் எதிரணியினர் சேவாகை வைத்தே திட்டமிடுகின்றனர். இதனால் அவர் விளையாடுகிறாரோ, இல்லையோ எதிரணியினர் தங்கள் உத்திகளை வகுக்கும் போது சேவாக் பற்றி பேசி அரை மணி நேரத்தை விரயம் செய்யட்டுமே என்றுதான் அவர் பற்றி முன்னரே குறிப்பிடவில்லை" என்று விளக்கமளித்தார் தோனி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிசிசிஐக்கு குட்டு வைத்த ஐசிசி… பாகிஸ்தான் பெயரை ஜெர்ஸியில் பொறிக்க உத்தரவு!

கம்பீருக்கு இன்னும் நேரம் கொடுக்க வேண்டும்… கங்குலி திடீர் ஆதரவு!

சாம்பியன்ஸ் ட்ராபிக்கான கேப்டன்கள் போட்டோஷூட்… ரோஹித் ஷர்மாவை அனுப்ப மறுக்கும் பிசிசிஐ!

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறாரா டிவில்லியர்ஸ்… அவரே கொடுத்த அப்டேட்!

Show comments