Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூபதி-போபண்ணா பாரீஸ் மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றனர்

Webdunia
திங்கள், 5 நவம்பர் 2012 (12:46 IST)
FILE
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் 5-ம் நிலை ஜோடியான இந்தியாவின் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி, 7-ம் நிலை ஜோடியான பாகிஸ்தானின் ஐசாம்-உல்-ஹக் குரேஷி, நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியை வென்று பட்டம் வென்றது.

1 மணிநேரம் 24 நிமிடங்கள் கடுமையாக நடைபெற்ற இந்த போட்டியில் மகேஷ் பூபதி-ரோகன் போபண்ணா ஜோடி 7- 6 (6), 6- 3 என்ற நேர் செட்டுகளில் பாகிஸ்தானின் ஐசாம்-உல்-ஹக் குரேஷி, நெதர்லாந்தின் ஜீன் ஜூலியன் ரோஜர் ஜோடியை வெற்றிக்கொண்டது.

இந்த சீசனில் நான்கு இறுதிப்போட்டிகளுக்கு இந்த ஜோடி தேர்வானது குறிப்பிடத்தக்கது. முன்னதாக துபாய் ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற பூபதி-போபண்ணா ஜோடி, தற்போது இரண்டாவதாக பாரிஸ் மாஸ்டர்ஸ் பட்டத்தையும் வென்றுள்ளது.

ஏற்கனவே, இந்த வருடம் நடைபெற்ற ஏ.டி.பி., சின்சினாட்டி ஓபன் மற்றும் ஷாங்காய் ரோலக்ஸ் மாஸ்டர்ஸ் தொடர்களில் பூபதி-போபண்ணா இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.

வலுவான ராஜஸ்தானை எதிர்கொள்ளும் முன்னணி வீரர்கள் இல்லாத பஞ்சாப்… டாஸ் அப்டேட்!

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

RCB க்கு எதிரான போட்டியில் நான் விளையாடியிருந்தால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எளிதாகி இருக்கும்- ரிஷப் பண்ட் வேதனை!

இவரு கேட்ச் பிடிக்க… அவரு எழுந்து கைதட்ட ஒரே கூத்துதான்… கோயங்காவின் நண்பேண்டா மொமண்ட்!

Show comments