Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3-வது சுற்றில் செரீனா, சியாவோனி, இவானோவிச்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (18:48 IST)
FILE
விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று சற்று முன் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், இத்தாலியின் சியாவோனி, செர்பியாவின் இவானோவிச் ஆகியோர் 2வது சுற்றில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

தரநிலையில் இல்லாத ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் என்பவரை எதிர்கொண்ட செரினா 3- 6, 6- 2, 6- 1 என்ற செட் கணக்கில் சற்றே போராடி வென்று 3வது சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

முதல் செட்டை அபாரமாகக் கைப்பற்றினார் ஹாலெப் ஆனால் அதன் பிறகு செரீனா தனது ஆட்டத்தைக் கண்டுபிடித்துக் கொண்டார். இந்த நிலையில் ஹாலெப்பால் ஒன்றும் செய்ய முடியாமல் பணிந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் இத்தாலியின் சியாவோனி செக். வீராங்கனை ஸ்ட்ரைகோவாவை 7- 5, 6- 3 என்று எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றான 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

தன்னுடைய ஃபார்முக்கு போராடி வரும் செர்பிய வீராங்கனை கிரேக்க வீராங்கனை டேனிலிடூவை 6- 3, 6- 0 என்று எளிதில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

பெல்ஜியம் வீராங்கனை விக்மேயர், ஸ்லோவேகிய வீராங்கனை சிபுல்கோவா, ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸ், ரஷ்யாவின் நாடியா பெட்ரோவா, குஸ்னெட்சோவா ஆகியோரும் தங்களது ஆட்டங்களை வென்று 3வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றே ஓவர்களில் மலேசியா அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி.. அபார வெற்றி..!

என் பசி இன்னும் அடங்கவில்லை… இந்திய அணிக்காக விளையாடுவது முகமது ஷமி கருத்து!

கொல்கத்தா அணியை விட்டு விலகியது இதனால்தான்… ஸ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்!

கோலி அரிதான வீரர்… அவர் ஃபார்ம் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை – கங்குலி ஆதரவு!

ரோஹித் ஷர்மான்னா அன்பு… புகழ்ந்து தள்ளிய ரிஷப் பண்ட்!

Show comments