Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிறுதியில் சாய்னா நுழைவு

Webdunia
வியாழன், 23 ஜூன் 2011 (18:03 IST)
இந்தோனேஷியன் ஓபன் சூப்பர் தொடர் பேட்மின்டன் ஒற்றையர் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தகுதி பெற்றார்.

பெட்யா நெடல்சேவா என்ற வீராங்கனையை 31 நிமிடங்களில் 21- 18, 21- 9 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார் சாய்னா.

முதல் செட்டில் 6- 2 என்று முன்னிலை பெற்றிருந்தார் சாய்னா ஆனால் பல்கேரிய வீராங்கனை அதன் பிறகு சிறப்பாக விளையாடி 12- 12 என்று சமன் செய்தார். ஆனால் இறுதியில் சாய்னா அபாரமாக ஆடி வெற்றி பெற்றார்.

இரண்டாவது செட்டில் 5- 2 என்று முன்னிலை பெற்றிருந்த சாய்னா சில அபாரமான ஆட்டத்தினால் இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டே சென்றார்.

2009, 2010 ஆம் ஆண்டுகளில் இந்தோனேஷியன் ஓபன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார் சாய்னா, இதனையும் வென்றால் ஹேட்ரிக் சாதனை புரிந்தவர் ஆவார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்: 6 அணிகளுக்கு அனுமதி..!

இன்ஸ்டாகிராமில் விளம்பரப் பதிவுகளை நீக்கிய கோலி… என்ன காரணம்?

பேட்டில் பந்து பட்டதா… அல்லது பேட் தரையில் பட்டதா? – சர்ச்சையைக் கிளப்பிய ரியான் பராக் விக்கெட்!

கம்பீர் கொடுத்த அட்வைஸ்தான் என் மகனுக்கு உதவியது… பிரயான்ஷ் ஆர்யாவின் தந்தை நெகிழ்ச்சி!

இது என் கிரவுண்ட்.. இங்க என்னைக் கண்ட்ரோல் பண்ணவே முடியாது- டிவில்லியர்ஸின் சாதனையை சமன் செய்த சாய்!

Show comments