Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராடி வென்றா‌ர் வீனஸ்

Webdunia
புதன், 22 ஜூன் 2011 (21:06 IST)
விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளின் 2வது சுற்றில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-7 (6-8), 6-3, 8-6 எ‌ன்ற செ‌ட் கண‌க்‌கி‌ல் போராடி வெற்றி பெற்றார்.

2 வது சு‌ற்‌றி‌ல் ஜப்பான் வீராங்கனை கிமிகோ டேட் குருமை எதிர்கொண்ட வீனஸ் முதல் செட்டில் 0-3 என்று பின்தங்கினார். அதன்பிறகு சிறப்பாக விளையாடி டை-பிரேக்கர் வரை வந்தார். ஆனால் கிமிகோவின் சிறப்பான ஆட்டத்தால் 6-8 என்ற புள்ளிகள் கணக்கில் செட்டை இழந்தார் வீனஸ்.

ஆனால், 2வது செட்டில் வீனஸ் அபாரமாக விளையாடி 6-3 என்று கைப்பற்றினார்.

ஆனால், 3வது செட்டில் கடும் போட்டியாக அமைந்தார் கிமிகோ. இருவரும் தங்களது சர்வ்களை தக்கவைத்து 6-6 என்ற ஆட்டக்கணக்கிற்கு வந்தனர். இறுதி செட் என்பதால் டை-பிரேக்கர் கிடையாது. அதனால் ஆட்டம் தொடர்ந்தது.

வீனஸ் தனது சர்வை தக்கவைத்து 7-6 என்று முன்னேறினார். ஆனால், கிமிகோ தனது சர்வை தக்கவைக்கத் தவறினார். 3 மணி நேரம் நடந்த ஆட்டம், மேலும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் 8-6 என்ற கணக்கில் வீனஸ் இறுதி செட்டை கைப்பற்றி 3வது சுற்றிற்கு முன்னேறினார்.

தரவரிசையில் இல்லாத கிமிகோவின் இன்றைய ஆட்டம் வீனஸிற்கு பெரும் சவாலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்றே ஓவர்களில் மலேசியா அணியை வீழ்த்திய இந்திய மகளிர் அணி.. அபார வெற்றி..!

என் பசி இன்னும் அடங்கவில்லை… இந்திய அணிக்காக விளையாடுவது முகமது ஷமி கருத்து!

கொல்கத்தா அணியை விட்டு விலகியது இதனால்தான்… ஸ்ரேயாஸ் ஐயர் ஓபன் டாக்!

கோலி அரிதான வீரர்… அவர் ஃபார்ம் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை – கங்குலி ஆதரவு!

ரோஹித் ஷர்மான்னா அன்பு… புகழ்ந்து தள்ளிய ரிஷப் பண்ட்!

Show comments