ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஸ்குவாஷ் பிரிவு மகளிர் போட்டிகளில் இந்திய வீராங்கனைகளான தீபிகா பல்லிக்கல், ஜோஷ்னா சின்னப்பா காலிறுதியில் தோல்வி தழுவி வெளியேறினர்.
37ஆம் தரநிலையில் உள்ள ஜோஷ்னா சின்னப்பா மலேசிய வீராங்கனை வெம் என்பவருக்கு உண்மையான அச்சுறுத்தலாகத் திகழ்ந்தார்.
முதல் இரண்டு செட்களை 11- 7, 11- 9 என்று வென்ற ஜோஷ்னா அதன் பிறகு வெம்மின் அபார ஆட்டத்தினால் போராடி தோல்வி தழுவினார்.
மற்றொரு ஆட்டத்தில் தீபிகா பல்லிக்கல் உலகத் தரவரிசை முதலிடத்தில் உள்ள மலேசிய வீராங்கனை நிகோல் டேவிடைச் சந்தித்தார்.
போராடி விளையாடி 3-வது செட்டை மட்டுமே கைப்பற்றினார், மற்ற 3 செட்களிலும் தோல்வி தழுவினார்.