Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஸ்ட்ரேலியா கோல் மழை: இந்தியாவை ஊதித் தள்ளியது

ஆஸ்ட்ரேலியா கோல் மழை: இந்தியாவை ஊதித் தள்ளியது
, வியாழன், 14 அக்டோபர் 2010 (13:29 IST)
டெல்லியில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி தினமான இன்று ஆடவர் ஹாக்கி இறுதிப் போட்டியில் இந்தியாவை, உலக ஹாக்கி சாம்பியன் ஆஸ்ட்ரேலியா 8-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது முறையாக காமன்வெல்த் தங்கம் வென்றுள்ளது.

இந்தியாவுக்கு முதன் முறையாக காமன்வெல்த் ஹாக்கியில் வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது.

துவக்கத்தில் இந்தியா ஆக்ரோஷம் காட்டினாலும், ஆஸ்ட்ரேலியா எதிர்தாக்குதல் தொடுப்பதற்கு நிறைய வாய்ப்புகளை வழங்கினர். மேலும் எதிர்த்தாக்குதலை சமாளிக்க இந்திய வீரர்களிடம் போதிய பயிற்சியின்மை வெளிப்படையாகத் தெரிந்தது.

கோல்கீப்பர் பாரத் சேட்ரி மட்டும் இன்று இல்லையெனில் இந்தியா மேலும் 7 கோல்களை வாங்கியிருக்கக்கூடும். அப்படித்தான் இருந்தது இந்திய ஆட்டம் இன்று.

முதல் 15 நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை இந்தியா கோலாக மாற்ற முடியவில்லை. ஆனால் அதற்கு அடுத்த 2 நிமிடங்களில் ஆஸ்ட்ரேலியா எதிர்த்தாக்குதல் நடத்தியது, ஆஸ்ட்ரேலிய வீரர் ஆக்கண்டேல் அடித்த சக்தி வாய்ந்த ஷாட் சந்தீப் சிங்கின் குச்சியில் பட்டு கோலாக மாறியது. இந்திய கோல் கீப்பர் பாரத் சேட்ரியால் தடுக்க முடியாத கோல்களில் இதுவும் ஒன்று.

மீண்டும் ஆஸ்ட்ரேலியா தாக்குதல் தொடுக்க இந்திய வீரர்கள் அவர்கள் பின்னால் ஓடினர். சிரெல்லோ அடித்த சக்தி வாய்ந்த ஷாட்டில் பாரத் சேட்ரியே ஆடிப்போனார் மீண்டும் கோல்.

இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆனால் அதனை துஷார் கோட்டை விட்டார். இம்முறையும் கோட்டை விட்ட கையோடு ஆஸ்ட்ரேலிய எதிர்த்தாக்குதலை முறியடிக்க முடியவில்லை வில்சன் கோல் அடித்தார் ஆஸி.4-0 என்று முன்னிலை வகித்தது. இத்துடன் இடைவேளை வந்தது.

இடைவேளைக்குப் பிறகு இந்தியாவுக்கு ஒரு கார்னர் வாய்ப்பு கிடைத்தது அதனை அர்ஜுன் ஹாலப்பா ஒன்றுமில்லாத ஷாட்டால் கோட்டை விட்டார். மீண்டும் ஆஸ்ட்ரேலியா எதிர்த்தாக்குதல் நடத்தி கோலுக்கு அருகில் வந்து ஒரு அடி அடிக்கிறது இம்முறை கோல் கீப்பர் பாரத் சேட்ரி அபாரமாக தடுத்து விடுகிறார்.

ஆனால் அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா ஆக்ரோஷம் காட்ட, இந்தியா தனக்குக் கிடைத்த வாய்ப்புகளளயும் கோட்டை விட, மேலும் 4 கோல்களை இடைவேளைக்குப் பிறகு ஆஸ்ட்ரேலியா அடித்து 8-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை ஊதித் தள்ளி தங்கம் வென்றது.

இதில் வேதனையென்னவெனில் ஆட்டம் முடிய 10 வினாடிகளே உள்ள நிலையில் 8-வது கோலைத்திணித்தனர் ஆஸ்ட்ரேலியா.

அதாவது பாரத் சேட்ரி இல்லையெனில் கோல் போஸ்ட் என்பது ஆஸ்ட்ரேலியாவுக்குத் திறந்த வெளிதான். அப்படித்தான் இருந்தது இந்திய அணியின் பாதுகாப்பு வளையம்.

போட்டி முடிந்த பிறகு இரு அணிவீரர்களுக்கும் கை கொடுத்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

Share this Story:

Follow Webdunia tamil