Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேமரா மேன் மீது துப்பிய ரொனால்டோ

Webdunia
புதன், 30 ஜூன் 2010 (14:52 IST)
நேற்று ஸ்பெயினுக்கு எதிராக நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் தோல்வியடைந்த போர்ச்சுகல் அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னைப் பிந்தொடர்ந்த கேமரா மேன் மீது எச்சில் துப்பியதாக புகார் எழுந்துள்ளது.

ரொனால்டோவைப் பொறுத்தவரை இது அவரது ஆட்டத்திறனுக்கு ஒரு மோசமான உலகக் கோப்பையாக அமைந்தது. 4 ஆட்டங்களில் 3 ஆட்டங்கள் போர்ச்சுக்கல் அணி கோலே போடவில்லை.

நேற்று ஸ்பெயின் அனியுடன் தோல்வியடைந்த ஆட்டம் முடிந்த பிறகு கேமரா மேன் ஒருவர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் முகபாவனையை படம் பிடிக்க அவரை பின் தொடர்ந்தார்.

இதனைக் கண்டு ஆத்திரமடைந்த ரொனால்டோ எச்சிலைத் திரட்டி துப்பினார். அது கேமரா மேன் காலருகில் சென்று விழுந்தது.

இதனை அவர் வேண்டுமென்றே செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால் இது அவரது ஆளுமையின் மீது கறை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளர் ஆன டேரன் சமி!

சதத்தை நோக்கி கே.எல்.ராகுல்.. மீண்டும் ஏமாற்றிய ரோகித் சர்மா.. ஸ்கோர் விவரங்கள்..!

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

Show comments