Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஜர் ஃபெடரர், கிளைஸ்டர்ஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

Webdunia
திங்கள், 28 ஜூன் 2010 (19:26 IST)
விம்பிள்டன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் இன்றைய ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர், ஆஸ்ட்ரிய வீரர் யர்கன் மெல்சரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மகளிர் பிரிவில் ஹெனினை வீழ்த்தி சக வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

4 ஆம் தர நிலையில் உள்ள செர்பிய வீராங்கனை ஜெலெனா ஜான்கோவிச், ரஷ்ய வீராங்கனை ஸ்வொனரேவாவிடம் 4-வது சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஸ்வொனரேவாவை, கிம் கிளைஸ்டர்ஸ் காலிறுதியில் சந்திக்கிறார்.

அதேபோல் போலந்தின் ராத்வான்ஸ்கா (7), 9ஆம் தரநிலையில் உள்ள சீனாவின் நா லீயிடம் தோல்வி தழுவி வெளியேறினார். இதனால் நா லீ காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் தனது உச்சகட்ட ஃபார்மில் இருப்பது இன்று அவரது ஆட்டக்த்தின் மூலம் தெரிந்தது.

16 ஆம் தரநிலையில் உள்ள ஆஸ்ட்ரிய வீரர் யர்கன் மெல்சரை பெடரர் 6- 3, 6- 2, 6- 3 என்ற செட்களில் வீழ்த்தினார். 11 ஏஸ் சர்வ்களை (எதிராளியால் திருப்பமுடியாத சர்வ்) வீசிய பெடரர் முதல் சர்வை 85% துல்லியமாக அடித்து வெற்றி பெற்றார்.

இந்த சர்வ் விவகாரத்தில் மெல்சர் தோல்வி தழுவினார்.

மகளிர் பிரிவு ஆட்டத்தில் பெல்ஜியம் வீராங்கனைகளான கிம் கிளைஸ்டர்சும், ஜஸ்டின் ஹெனினும் மோதினர். இதில் முதல் செட்டை 6- 2 என்று ஹெனின் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்களில் கிம் கிளைஸ்டர்ஸ் 6- 2, 6- 3 என்று வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

சீட்டுக்கட்டு போல சரிந்த ஆஸ்திரேலிய விக்கெட்கள்… அப்ப நம்ம நிலைமை?

நான் பேட்டிங் செய்யத் தயாராக இருந்தேன்… ஆனால் அவர்கள் அற்புதம் செய்துவிட்டார்கள் – கே எல் ராகுல் பாராட்டு!

Show comments