Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரெஞ்ச் ஓபன் 3வது சுற்றில் இவானோவிக் வெற்றி

Webdunia
வெள்ளி, 29 மே 2009 (17:24 IST)
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்று ஆட்டத்தில் செர்பிய வீராங்கனை அனா இவானோவிக் வெற்றி பெற்றுள்ளார்.

ரோலான்ட் காரோஸில் இன்று நடந்த இப்போட்டியில், செக் குடியரசின் இவெட்டா பெனிஸோவாவுடன் மோதிய இவானோவிக், 6-0, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதில் முதல் செட்டை 23 நிமிடங்களில் கைப்பற்றிய இவானோவிக், அடுத்த செட்டைக் கைப்பற்ற 38 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு 3வது சுற்றுப்போட்டியில் போர்ச்சுகல் வீராங்கனை மிச்செல்லி டி-பிரிட்டோவுடன் மோதிய பிரான்ஸின் அரவனே ரெஸாய் 7-6 (7-3), 6-2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்… ரசிகர்கள் புலம்பல்!

ரஞ்சிக் கோப்பை தொடரில் கோலி விளையாட மாட்டார்… வெளியான தகவல்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை இன்று அறிவிக்கவுள்ள அகார்கர் & ரோஹித் ஷர்மா!

ரஞ்சி போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த ரிஷப் பண்ட்… இதுதான் காரணமாம்!

சமாஜ்வாதி எம்பியை திருமணம் செய்கிறார் ரிங்கு சிங்: எளிமையாக நடந்த நிச்சயதார்த்தம்..!

Show comments