Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வியிலிருந்து தப்பித்தார் ஆனந்த்

Webdunia
புதன், 25 பிப்ரவரி 2009 (11:28 IST)
ஸ்பெயினில் உள்ள லினாரஸ் நகரில் நடைபெறும் சர்வதேச செஸ் வீரர்கள் பங்குபெறும் தொடரில் இன்று நடைபெற்ற 5-வது சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியன் விஸ்வ நாதன் ஆனந்த், உக்ரைன் வீரர் இவான்சுக்கிடம் நூலிழையில் தோல்வியிலிருந்து தப்பி ஆட்டத்தை டிரா செய்தார்.

தற்போது ஆனந்த் 3 புள்ளிகளுடன் தனித்து 3ஆம் இடத்தில் உள்ளார். மற்ற ஆட்டங்களும் டிராவில் முடிந்துள்ளன.

ஆட்டத்தின் துவக்கத்தில் ஆனந்த் தனது உத்தியில் மேற்கொண்ட தவறினால் ஆட்டத்தின் 24-வது நகர்த்தலில் பான் ஒன்றை வெட்டிய இவான்சுக் அதன் பிறகு ஆனந்தின் ராணி இருக்கும் பகுதியில் கடுமையான நெருக்கடிகளை கொடுக்கத் துவங்கினார்.

இதனால் ஆனந்த் போர்டில் உள்ள மற்ற பகுதியில் தாக்குதல் ஆட்டம் ஆட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. ஆனால் ஆட்டத்தின் ஒரு நேரத்தில் இவான்சுக், ஆனந்தின் ராணி உள்ள பகுதியில் தனது பான்களால் நெருக்கடி கொடுத்து ஏறத்தாழ ஆனந்தை வெற்றி பெற்றிருப்பார் என்ற நிலை இருந்தது.

இந்த நேரத்தில் ஆனந்த் ஒரு முடிவெடுத்தார். அதாவது சில பல பான்களை இருவரும் வெட்டுக் கொடுத்த பிறகு, ராணி பகுதியில் இவான்சுக்கும், தானும் எந்த காயையும் நகர்த்த இயலாத நிலையை உருவாக்கினார்.

அதன் பிறகு 65 நகர்த்தல்கள் வரை சென்ற ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்த போட்டித் தொடரில் முதலிடத்தில் உள்ள ரஷ்ய வீரர் கிர்சுக், மற்றும் அரோனியன் ஆகியோர் தங்களது ஆட்டத்தை டிரா செய்தனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் டெஸ்ட் மழையால் நிறுத்தம்: 4வது விக்கெட்டும் விழுந்தது..!

பிரிஸ்பேன் டெஸ்ட்… மீண்டும் மழையால் ஆட்டம் பாதிப்பு!

மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: சீனாவை வீழ்த்திய இந்திய அணி சாம்பியன்..!

7 ஓவர்களில் 3 விக்கெட்.. இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்..

Show comments