Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதியில் ஃபெடரர், முர்ரே!

Webdunia
சனி, 18 அக்டோபர் 2008 (01:00 IST)
மேட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மேட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் ஒற்றையர் அரையிறுதியில் யு.எஸ். ஓபன் இறுதிப் போட்டியாளர்களான சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரும், பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரேயும் மோதுகின்றனர்.

காலிறுதிப் போட்டியில் அர்ஜென்டீனா வீரர் டெல் போர்ட்டோவை ரோஜர் ஃபெடரர் 6- 3, 6- 3 என்ற நேர் செட்களில் ஊதித் தள்ளினார்.

இந்த ஆண்டு சிறப்பான டென்னிஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே காலிறுதியில் பிரான்ஸ் வீரர் மான்ஃபில்ஸ் என்பவரை 6- 2, 6- 2 என்ற செட்களில் வெற்றி பெற்று அரையிறுதியில் ஃபெடரரை சந்திக்கிறார்.

மற்ற காலிறுதிப் போட்டிகளில் உலகின் முன்னணி வீரர் ரஃபேல் நடால் சக வீரர் ஃபெலிசியானோ லோபஸை சந்திக்கிறார். பிரான்ஸின் கில் சிமோன் குரேஷிய வீரர் இவொ கார்லோவிச்சை சந்திக்கிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அதிர்ஷ்டம் கைகொடுத்ததால் காபா டெஸ்ட்டை ட்ரா செய்த இந்திய அணி!

கபில்தேவ்வின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த பும்ரா..!

Show comments