Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹாலந்திடம் வீழ்ந்தது இத்தாலி!

ஹாலந்திடம் வீழ்ந்தது இத்தாலி!
, செவ்வாய், 10 ஜூன் 2008 (09:43 IST)
யூரோ 2008 கால்பந்து போட்டித் தொடர் நேற்றைய ஆட்டத்தில் 'சி' பிரிவு போட்டிகள் நடைபெற்றது. இதில் உலக சாம்பியன் இத்தாலியை 3- 0 என்ற கோல் கணக்கில் ஹாலந்து அணி வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் பிரான்சும் ருமேனியாவும் 0- 0 என்று சமன் செய்தது.

இத்தாலி- ஹாலந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடிய போதிலும், ஆட்டம் முழுதும் பெரும்பாலும் ஹாலந்தின் கை ஓங்கியிருந்தது.

ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் ஹாலந்து வீரர் ரூத் வான் நிசல் ரூய் முதல் கோலை அடித்தார். ஆனால் அது ஆஃப் சைட். ஆனால் நடுவர் அதனை கவனிக்கவில்லை. முதல் கோலே ஹாலந்திற்கு அதிர்ஷ்டவசமாக கிடைத்த கோலாயிற்று.

அதன் பிறகு 30-வது நிமிடத்தில் ஹாலந்து வீரர் வெஸ்லி ஸ்னெய்ஜ்தர் அபாரமான தாக்குதல் ஆட்டம் மூலம் 2-வது கோலை பெற்றுத் தந்தார். அதன் பிறகு இத்தாலி அணிக்கு கோல் கிடைத்த 2 வாய்ப்புகளையும் ஹாலந்து கோல் கீப்பர் எட்வின் வான் டெர் சர் தடுத்து விட்டார்.

ஆட்டம் அதன் விறுவிறு‌ப்பான இறுதிக் கணங்களை நெருங்கும்போது 79-வது நிமிடத்தில் ஹாலந்து வீரர் வான் பிரான்கர்ஸ்ட் தலையால் ஒரு கோலை அடித்து 30 ஆண்டுகால வரலாற்றை முறியடித்தார். அதாவது 1978 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இத்தாலியை வீழ்த்திய பிறகு இந்த போட்டியில்தான் ஹாலந்து அணி இத்தாலியை வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூரிச்சில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பிரான்சும், ருமேனியாவும் 0- 0 என்று டிரா செய்தன. மந்தமான ருமேனிய அணியை வீழ்த்த பிரான்ஸ் தவறி விட்டது. தியரி ஹென்றி பிரான்ஸ் அணியில் இல்லை. மேலும் பிரான்ஸ் ஆட்டம் சோபிக்கவில்லை. கிடைத்த ஓரிரு வாய்ப்புகளையும் ருமேனிய தடுப்பு உத்திகள் முறியடித்து விட்டன.

ருமேனிய கோல் காப்பாளரிடம் பந்துகள் குறைந்த இடைவெளிகளில் வந்தவண்ணம் இருக்க, பிரான்ஸ் கோல் கீப்பர் க்ரிகர் கூபேயிடம் பந்துகள் ஏறத்தாழ வரவேயில்லை என்று கூறிவிடலாம். ருமேனியா அந்த அளவிற்கு மந்தமான எதிர்மறை உத்தையை பயன்படுத்தி விளையாடியது.

இது வரை, போர்ச்சுக்கல், செக் குடியரசு. ஜெர்மனி, குரேஷியா, ஹாலந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்று தலா 3 புள்ளிகளுடன் அந்தந்த பிரிவுகளில் முன்னிலை பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil