Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீனஸ், ஜான்கோவிச் முன்னேற்றம்!

Webdunia
வெள்ளி, 30 மே 2008 (12:53 IST)
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டங்களில் அமெரிக்காவைச்சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் செர்பியாவின் ஜெலெனா ஜான்கோவிச் உட்பட முன்னணி வீராங்கனைகள் 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

டுனீஷிய வீராங்கனை செலிமா சஃபார் என்பவரை வீனஸ் 6- 2, 6- 4 என்ற செட்களில் சுலபமாக வீழ்த்தினார்.

22- வது தரவரிசையில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை அமேலி மௌரிஸ்மோ ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரேஸ் நவாரோ என்ற அதிகம் அறியப்படாத வீராங்கனையிடம் 3- 6, 4- 6 என்ற செட் கணக்கில் தோல்வி தழுவி பிரான்ஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

ஆனால் 19-வது தரவரிசையில் உள்ள மற்றொரு பிரான்ஸ் வீராங்கனை கார்னெட் அர்ஜென்டீனா வீராங்கனை டல்கோவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

ஜெலெனா ஜான்கோவிச், ரஷ்ய வீராங்கனை குஸ்னெட்சோவா, எலினா டீமென்டீவா, பலாரஸ் வீராங்கனை அஸரென்கா, ஆகியோர் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆனால் தரவரிசை 31-ல் உள்ள ஜப்பானின் ஐ சூஜியாமா பெலாரஸ் வீராங்கனை ஓல்கா கொவோர்சோவா என்பவரிடம் அதிர்ச்சித் தோல்வி தழுவினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

என்னை சுற்றி எழுந்துள்ள சர்ச்சைகளைக் கண்டுகொள்வதில்லை… வைபவ் சூர்யவன்ஷி பதில்!

சாம்பியன்ஸ் கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக்கொண்ட பாகிஸ்தான்… வைத்த நிபந்தனைகள் இதுதான்!

ரோஹித் வந்தால் கே எல் ராகுல் எங்கு இறங்கவேண்டும்?.. புஜாரா சொல்லும் ஆலோசனை!

இந்தியில் சமூகவலைதளக் கணக்குகள்… ரசிகர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்கும் RCB!

Show comments