Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாக்கி: பாகிஸ்தானை வென்றது இந்தியா!

Webdunia
வியாழன், 15 மே 2008 (16:36 IST)
இபோ: மலேசியாவில் நடைபெறும் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் இந்தியா பாகிஸ்தானை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் தொடர்ந்து 3ஆவது போட்டியை வென்றுள்ளது இந்தியா.

7 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த பாரம்பரியமிக்க ஹாக்கி தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தோலியடைந்த இந்தியா இப்போது பாகிஸ்தானை வீழ்த்தியதன் மூலம் 3வது வெற்றியை ஈட்டியுள்ளது.

இடைவேளைக்கு முன் 6ஆவது நிமிடத்தில் இந்திய வீரர் சந்தீப் சிங், பிறகு 20வது நிமிடத்தில் திவாகர் ராம் ஆகியோர் 2 கோல்களை அடித்து முன்னிலை கொடுத்தனர்.

ஆட்டத்தின் துவக்கத்திலிருந்தே இந்திய வீரர்கள் தாக்குதல் ஆட்டம் விளையாடினர். குறிப்பாக முன் கள வீரர் ஷிவேந்திர சிங் அபாரமாக விளையாடி இரண்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தார்.

6 ஆவது நிமிடத்தில் சந்தீப் சிங் பெனால்டி கார்னர் வாய்ப்பை தன் சக்தி வாய்ந்த ஷாட் ஒன்றால் கோலாக மாற்றினார்.

பாகிஸ்தான் இடைவேளைக்கு முன்பே 4 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றாமல் கோட்டை விட்டனர்.

கடைசியில் ஆட்டத்தின் 58வது நிமிடத்தில் பாகிஸ்தான் முதல் கோலை அடித்தது வெறும் ஆறுதல் கோலாக அமைந்தது.

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகளில் இந்திய அணி 9 புள்ளிகளை பெற்றுள்ளது. நாளை மலேசியாவுடன் மோதுகிறது இந்திய அணி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்தைக் கணிப்பதில் கோலியிடம் பிரச்சனை…. சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

4வது டி20 போட்டியிலும் வெற்றி.. தொடரை வென்றது இந்தியா.. சொந்த மண்ணில் தெ.ஆ. பரிதாபம்..

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் 13 வயது சிறுவன்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி!

யார் சாமி இவரு.. ஒரே ஆளாக 10 விக்கெட்டையும் தட்டித் தூக்கிய அன்ஷுல் கம்போஜ்! - மிரண்டு போன மைதானம்!

விராட் கோலிக்கு என்ன ஆச்சு?... திடீரென நடந்த மருத்துவப் பரிசோதனை!

Show comments