Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோம் மாஸ்டர்ஸ்: காலிறுதியில் ஃபெடரர்!

Webdunia
வெள்ளி, 9 மே 2008 (12:02 IST)
ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர், செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆனால் ரஷ்ய வீரர் நிகோலெய் டேவிடென்கோ, 4- 6, 6- 2, 7- 6 என்ற செட்களில் டாமி ராபிரீடோவிடம் தோல்வி தழுவி வெளியேறினார்.

ரோஜர் பெடரர் முதல் செட்டில் இரண்டு பிரேக்குகளை கொடுத்தாலும் செட்டை டைபிரேக்கில் 7- 6 என்று கைப்பற்றினார். எதிர்த்து ஆடிய குரேஷிய வீரர் இவோ கார்லோவிக் அதன் பிறகு மீள முடியவில்லை. இரண்டாவது செட்டில் பெடரர் மேலும் எளிதாக 6- 3 என்று வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

ரஷ்ய வீரர் ஐகோர் ஆந்த்ரீவை செர்பிய வீரர் ஜோகோவிச் 6- 3, 3- 6, 6- 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

லூயிஸ் ஹோர்னாவை வீழ்த்தி செக். வீரர் ஸ்டெபானெக் காலிறுதியில் ரோஜர் பெடரரை சந்திக்கிறார்.

மற்றொரு 3ஆம் சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டீனாவின் பெர்னான்டோ கொல்சாலேஸ் கால்வலி காரணமாக விலகியதால் எதிர்த்து ஆடிய ஸ்பெயின் வீரர் அல்மார்கோ காலிறுதிக்கு முன்னெறி அதில் ஜோகோவிச்சை சந்திக்கவுள்ளார்.

இத்தாலிய வீரர் போலீலியை வீழ்த்தி ஆன்டி ரோடிக்கும், ஃபெர்னான்டோ வெர்டாஸ்கொவை வீழ்த்தி அமெரிக்க வீரர் ஜேம்ஸ் பிளேக்கும் காலிறுதிக்குள் நுழைந்துள்ளனர். ஃபெரெரோவை 6- 4, 6-3 என்ற செட்களில் வீழ்த்தி வார்வின்கோ காலிறுதிக்குள் நுழைந்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

Show comments