Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோதிகுமரனுக்கு தமிழக ஹாக்கி ஆதரவு!

ஜோதிகுமரனுக்கு தமிழக ஹாக்கி ஆதரவு!
, திங்கள், 28 ஏப்ரல் 2008 (11:38 IST)
இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் முன்னாள் தலைமைச் செயலர் ஜோதிகுமரன் மீதான லஞ்ச குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்று கூறியுள்ள தமிழக ஹாக்கி கூட்டமைப்பு அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ரகசிய புலனாய்வில் தேசிய ஹாக்கி அணியில் வீரர் ஒருவர் இடம்பெற லஞ்சம் பெற்றதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனையடுத்து ஜோதிகுமரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தமிழக ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஜோதிகுமரன் மீது முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தனியார் தொலைக்காட்சியின் இந்த தவறான செய்தி குறித்து கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

தமிழக ஹாக்கி கூட்டமைப்பின் துணைத் தலைவர் வி.பாஸ்கரன், ஜோதிகுமரன் மீது முழு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த குறிப்பிட்ட தனியார் தொலைக்காட்சி மீது சட்ட நடவடிக்கையும் தேவைப்பட்டால் எடுப்போம் என்று அந்த அறிக்கையில் தமிழக ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil