Webdunia - Bharat's app for daily news and videos

Install App

IHF மீது நடவடிக்கை எடுக்க சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வலியுறுத்தல்!

Webdunia
புதன், 23 ஏப்ரல் 2008 (17:07 IST)
இந்திய ஹாக்கி அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்ய லஞ்சம் பெற்ற ஜோதிகுமரன் சம்பவத்தையடுத்து, இந்திய ஹாக்கி கூட்டமைப்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது!

இந்திய அணிக்கு வீரர்களைத் தேர்வு செய்ய லஞ்சம் பெறப்படுகிறது என்பதனை, ஜோதிகுமரனுக்கு லஞ்சம் கொடுத்து அதனை ரகசியமாகப் படம் பிடித்து டெல்லியைச் சேர்ந்த ஆஜ் தக் தொலைக்காட்சி வெளிப்படுத்தியது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவர் எல்ஸ் வான் ப்ரீடா விரீஸ்மேன், "அது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இந்திய ஒலிம்பிக் சங்கம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

ஜோதிகுமரன் விவகாரத்தையடுத்து இந்திய ஹாக்கி கூட்டமைப்பு குறித்து விவாதிக்க இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு அவசரமாக கூடவுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் சுரேஷ் கல்மாடி, பொதுவாக ஏழு நாள் முன்னறிவிக்கைக்குப் பிறகு செயற்குழு கூடும். ஆனால், தற்பொழுது எழுந்துள்ள சூழ்நிலையில் வரும் 28 ஆம் தேதி செயற்குழு அவசரமாகக் கூட்டப்படுகிறது என்று கூறினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ். கில்லுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்திலுள்ள ஒவ்வொரு விளையாட்டு அமைப்பிற்கும் தங்களுடைய எண்ணத்தை தெரிவிக்கக்கூடிய ஜனநாயக உரிமை உண்டு என்று கூறினார்.

இதற்கிடையே, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் துணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, ஜோதிகுமரன் விவகாரம் இந்திய ஹாக்கி கூட்டமைப்பின் நிர்வாகம் இருட்டறையில் நடந்து வந்ததையே வெளிப்படுத்தியுள்ளது என்று கடுமையாகக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புரோ கபடி 2024: இன்று தமிழ் தலைவாஸ் போட்டி.. 9வது இடத்தில் இருந்து முன்னேறுமா?

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்… கம்பேக் போட்டியில் கலக்கிய ஷமி!

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

Show comments