Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்கள் டிராப் துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு ஏமாற்றம்!

Webdunia
ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 (15:14 IST)
PTI PhotoFILE
சீனாவின் பீஜிங்கில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் டிராப் பிரிவு துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் நிச்சய பதக்க நம்பிக்கைகளாக கருதப்பட்ட மானவ்ஜித் சாந்து, மன்ஷிர் சிங் இருவரும் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இன்று நடந்த டிராப் பிரிவு ( trap even t) இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான சுற்றில், மானவ்ஜித், மன்ஷிர் இருவரும் தங்கள் திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தத் தவறியதால் இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தகுதிச்சுற்றில் முதல் 6 இடங்களைப் பிடிப்பவர்களே இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். ஆனால் இந்திய நட்சத்திரங்களான மன்ஷிர் 117 புள்ளிகளுடன் 8வது இடத்தையும், மானவ்ஜித் 116 புள்ளிகளுடன் 12வது இடத்தையும் பிடித்ததால் இறுதிக்கான வாய்ப்பை இழந்தனர்.
இப்போட்டியில், முதல் 7 இடங்களைப் பிடித்த வீரர்கள் 121 புள்ளிகள் (இருவர்), 120 புள்ளிகள் (இருவர்), 119 புள்ளிகள் (மூவர்) பெற்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவை அடுத்து ஜெய்ஸ்வால் & கில் எடுத்த அதிரடி முடிவு!

கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு மறுபரிசீலனைக்கு உள்ளாகிறதா?..

திருப்பதி கோவிலுக்கு முட்டிப்போட்டு ஏறிய நிதிஷ்குமார் ரெட்டி! - நேர்த்திக்கடன் வீடியோ வைரல்!

உள்ளூர் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் ரோஹித் ஷர்மா… மும்பை அணியோடு பயிற்சி!

கோலிக்குப் பிடிக்கவில்லை என்றால் அணியில் இருக்கமுடியாது… ராபின் உத்தப்பா குற்றச்சாட்டு!

Show comments