Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்மின்டன்: 2வது சுற்றிலும் சாய்னா வெற்றி!

Webdunia
ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2008 (17:53 IST)
PTI PhotoFILE
பீஜிங் ஒலிம்பிக்கின் மகளிர் பேட்மின்டன் 2வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இன்று நடந்த இப்போட்டியில் உக்ரைனின் லரிஸா கிரிக்யாவுடன் மோதிய சாய்னா, முதல் செட்டை 21-18 என்ற புள்ளிக்கணக்கில் போராடி கைப்பற்றினார். 2வது செட் ஆட்டத்தில் சாய்னா சிறப்பாக விளையாடியதால் 21-10 என்ற புள்ளிக் கணக்கில் அதனை எளிதாக கைப்பற்றி, 2-0 என்ற நேட் செட்களில் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ள சாய்னா, ஹாங்காங் வீராங்கனை சென்-வாங், ஸ்லோவக்கியாவின் இவா ஸ்லடிகோவா இடையிலான 2வது சுற்றுப்போட்டியில் வெற்றி பெறுபவரை எதிர்த்து விளையாட உள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவை அடுத்து ஜெய்ஸ்வால் & கில் எடுத்த அதிரடி முடிவு!

கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு மறுபரிசீலனைக்கு உள்ளாகிறதா?..

திருப்பதி கோவிலுக்கு முட்டிப்போட்டு ஏறிய நிதிஷ்குமார் ரெட்டி! - நேர்த்திக்கடன் வீடியோ வைரல்!

உள்ளூர் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் ரோஹித் ஷர்மா… மும்பை அணியோடு பயிற்சி!

கோலிக்குப் பிடிக்கவில்லை என்றால் அணியில் இருக்கமுடியாது… ராபின் உத்தப்பா குற்றச்சாட்டு!

Show comments