Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் குழு வில்வித்தை: காலிறுதியில் சீனாவிடம் இந்தியா தோல்வி!

Webdunia
பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான காலிறுதி வில்வித்தை குழு போட்டியில் சீன அணியிடம் இந்தியா போராடித் தோற்றது.

இன்று நடந்த இப்போட்டியில் இந்திய மகளிர் அணியான பம்பைலா தேவி, டோலா பானர்ஜி, பிரனீதா மூவரும் துவக்கத்தில் சீனக் குழுவுக்கு (லின் ஜியாங், வென்குவான்லி, பெஃங்-சூ) ஈடுகொடுத்து விளையாடினாலும், இறுதியில் 6 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றனர்.

இதில் இந்திய அணி 5 முறை பத்து புள்ளிகளை ஈட்டினாலும், சீனா 9 முறை பத்து புள்ளிகளை ஈட்டி அரையிறுதியில் தனக்கான இடத்தைப் பதிவு செய்தது. இப்போட்டியில் இந்தியா மகளிர் அணி 206 புள்ளிகளும், சீன அணி 211 புள்ளிகளும் பெற்றுள்ளன.

குழுப் போட்டியில் தோல்வியுற்றாலும், 12ஆம் தேதி நடைபெற உள்ள தனி நபர் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவை அடுத்து ஜெய்ஸ்வால் & கில் எடுத்த அதிரடி முடிவு!

கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு மறுபரிசீலனைக்கு உள்ளாகிறதா?..

திருப்பதி கோவிலுக்கு முட்டிப்போட்டு ஏறிய நிதிஷ்குமார் ரெட்டி! - நேர்த்திக்கடன் வீடியோ வைரல்!

உள்ளூர் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் ரோஹித் ஷர்மா… மும்பை அணியோடு பயிற்சி!

கோலிக்குப் பிடிக்கவில்லை என்றால் அணியில் இருக்கமுடியாது… ராபின் உத்தப்பா குற்றச்சாட்டு!

Show comments