Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரவீண் குமாரின் வன்முறை! 'விளையாடும் மனோ நிலையில் இல்லை' - புகார்

Webdunia
வெள்ளி, 8 பிப்ரவரி 2013 (11:21 IST)
FILE
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீண் குமார் மிகவும் வெறுப்படைந்த மனோநிலையில் உள்ளதாகவும் எதிரணி மற்றும் சக வீரர்களுடனேயே மோதல் போக்கை கடைபிடிப்பவராகவும் மைதானத்தில் ஆக்ரோஷமாகவும் வன்முறையாகவும் நடந்து கொள்கிறார் என்றும் அவர் மீது குற்றசாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன.

ஓ.என்.ஜி.சி. அணிக்கும், இன்கம் டேக்ஸ் அணிக்கும் இடையே பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்ற கார்ப்பரேட் டிராபி போட்டியின் போது எதிரணி வீரர் ஒருவரை மண்டையால் முட்டியும், அவர் மீது தன் நெஞ்சால் இடித்தும் மிக மோசமாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.

அஜிதேஷ் அர்கல் என்ற வீரரை கடுமையான கெட்ட வார்த்தைகளால் திட்டி உடல் ரீதியான வன்முறையிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வரை விஷயம் கவன ஈர்ப்பு பெற்றுள்ளது.

" விளையாடும் மனோ நிலையில் பிரவீண் குமார் இல்லை' என்று நடுவர்கள் அவர் மீது அறிக்கை தயாரித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனுப்பியுள்ளார்.

இதே கார்ப்பரேட் டிராபி போட்டியில் பிப்ரவரி 1ஆம் தேதியும் ரைப்பூரில் மைதான ரசிகர்களிடம் அவர் முறைப்பாக நடந்து கொண்டார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தான் அணித் தேர்வுக் குழுவினரால் ஒதுக்கப்படுகிறேன் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய பிரவீண் குமார், இந்திய அணிக்கு தான் தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவதில்லை என்ற வெறுப்பு காரணமாக உள்ளூர் போட்டிகளில் வன்முறையான நடத்தையை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

தன் அணி வீரர்களையே கடுமையான கெட்ட வார்த்தைகளால் அவர் ஏசுவதாக புகார் எழுந்துள்ளது.

இவர் மீது பிசிசிஐ. கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்.. இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!

புற்றுநோயை வென்றவர் யுவ்ராஜ் சிங்… ஆனால் அவரை உடல்தகுதியைக் காரணம் காட்டி நீக்கினார்கள்.. கோலியை குற்றம்சாட்டும் உத்தப்பா!

இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட உள்ளாரா தோனி?

நான் இந்திய அணிக்குக் கேப்டன் ஆகாததற்கு இதுதான் காரணம்.. அஸ்வின் ஓபன் டாக்!

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

Show comments