Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வு முடிவை கோபத்தில் எடுத்துவிட்டேன்: கங்கூலி வேதனை

Webdunia
திங்கள், 9 ஜூலை 2012 (13:44 IST)
FILE
சர்வதேச போட்டிகளில் இருந்து முன்னதாகவே ஓய்வு பெற்று விட்டேன் இது என்னை வருத்தமடையச் செய்கிறது என்று இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் என்று வர்ணிக்கப்படும் சௌரவ் கங்கூலி வருந்தியுள்ளார்.

இதுதொடர்பாக கங்குலி கூறியதாவது:-

எனது ஓய்வு முடிவு வருத்தம் அளிக்கிறது. சர்வதேச போட்டிகளில் முன்னதாக ஓய்வு பெற்றுவிட்டேன். கோபத்தில் நான் அதனைச் செய்திருக்கக்கூடாது. இன்னும் 2 ஆண்டுகள் விளையாடி இருக்கலாம். ஒரு தொடரில் சிறப்பாக ஆடாததால் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்று கருதி இந்த முடிவை எடுத்தேன். ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணியில் 3 ஆண்டு ஒப்பந்தமாக இருக்கிறேன். இதனால் 6-வது ஐ.பி.எல். போட்டியிலும் ஆடுவேன்.

என்று கூறியுள்ளார் கங்கூலி.

கங்குலி 113 டெஸ்டில் விளையாடி உள்ளார். 7,212 ரன் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 239 ரன் எடுத்தார். 16 சதமும், 35 அரை சதமும் அடித்துள்ளார். 311 ஒருநாள் போட்டியில் 11,363 ரன் எடுத்துள்ளார். 22 சதமும், 72 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்ச ரன் 183 ஆகும்.

இலங்கைக்கு எதிராக 2008ஆம் ஆண்டு தொடரில் கங்கூலியின் ஆட்டம் சொதப்பல் கண்டது சராசரி 16 ரன்களே வைத்திருந்தார். அதன் பிறகு ஒருமாதத்திற்கும் குறைவான காலத்தில் தனது ஓய்வை அறிவித்தார் கங்கூலி.

" ஒரேயொரு தொடரில் சரியாக விளையாடவில்லை. உடனேயே இரானி கோப்பைக்கான அணியில் என் பெயர் இடம்பெறவில்லை. அவர்கள் என்ன செய்யட்டுமோ செய்யட்டும், நம் காலம் வரை காத்திருப்போம் என்று நான் முடிவெடுத்திருக்கலாம் ஆனால் கோபத்தி முடிவெடுத்து விட்டதாகவே எனக்கு படுகிறது, என்றார் கங்கூலி.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

The Greatest of all time! T20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே இந்திய வீரர்! மாஸ் காட்டிய King Kohli!

MI vs RCB! ஆத்தி.. என்னா அடி! Power Play-ல் பொளந்து கட்டிய கோலி-படிக்கல்!

உலக குத்துச்சண்டை கோப்பை.. இந்திய வீரர் தங்கம் வென்று சாதனை..!

போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம்.. என்ன தவறு செய்தார் இஷாந்த் ஷர்மா!

டி 20 என்றாலே பேட்ஸ்மேன்களைப் பற்றிதான் பேசுகிறார்கள்… ஆனால்?- ஷுப்மன் கில் கருத்து!

Show comments