Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தரவரிசையில் டெண்டுல்கர் முன்னேற்றம்

தரவரிசையில் டெண்டுல்கர் முன்னேற்றம்
, புதன், 27 ஜூன் 2012 (13:21 IST)
FILE
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்ட புதிய டெஸ்ட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் டெண்டுல்கர் ஒரு இடம் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.

டாப் 20 இடத்திற்குள் அங்கம் வகிக்கும் ஒரே இந்திய வீரர் டெண்டுல்கர் தான். வெஸ்ட் இண்டீசின் சந்தர்பால் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 199 ரன்கள் குவித்த இலங்கை வீரர் சங்கக்கரா 3 இடங்கள் எகிறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் முதலிடத்திலும், பாகிஸ்தானின் அஜ்மல் 2-வது இடத்திலும் தொடருகின்றனர்.

இந்தியாவின் ஜாகீர்கான் ஒரு இடம் உயர்ந்து 11-வது இடத்திலும், பிரக்யான் ஓஜா 20-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்) முதலிடத்திலும், காலிஸ் (தென்ஆப்பிரிக்கா) 2-வது இடத்திலும் உள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil