Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் இந்திய `ஏ' அணி வெற்றி

20 ஓவர் கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் இந்திய `ஏ' அணி வெற்றி
, செவ்வாய், 26 ஜூன் 2012 (13:05 IST)
FILE
இந்திய `ஏ' அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு `ஏ' அணியுடன் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1- 2 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் 2-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய `ஏ' அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹானே 79 ரன்னும், ஷிகர் தவான் 33 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் `ஏ' அணி 20 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் `டை'யில் முடிந்தது. அதிகபட்சமாக போன்னர் 82 ரன்னும், போவெல் 34 ரன்னும் எடுத்தனர். ஆட்டம் `டை'யில் முடிந்ததால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதன்படி ஒரு ஓவரை முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் `ஏ' அணி 5 பந்துகளில் 2 விக்கெட்டுக்கு 4 ரன் எடுத்தது. கார்ட்டர் 3-வது பந்திலும், போன்னர் 5-வது பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

போவெல் ஒரு ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். `இந்திய ஏ' அணி 3 பந்துகளில் ஒரு விக்கெட் இழப்புக்கு 7 ரன் எடுத்து வெற்றி கண்டது.

ரோகித் ஷர்மா முதல் பந்தில் ஆட்டம் இழந்தார். ஷிகர் தவான் 4 ரன்னுடனும், மனோஜ் திவாரி ஒரு ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய `ஏ' அணி 20 ஓவர் போட்டி தொடரை 1- 1 என்ற கணக்கில் சமன் செய்தது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் `ஏ' அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது.

Share this Story:

Follow Webdunia tamil