Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆமை வேக சென்னை அணிக்கு கொல்கத்தா பாடம்!

Webdunia
செவ்வாய், 1 மே 2012 (10:01 IST)
FILE
ஐபிஎல் போட்டியின் 41-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சூப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

பின்னர் பேட் செய்த கொல்கத்தா 19.4 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

சென்னையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. ரித்திமான் சாஹா, குலசேகரா ஆகியோருக்குப் பதிலாக மைக் ஹசி, யோமகேஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

டாஸ் வென்ற கேப்டன் தோனி, பேட்டிங்கைத் தேர்வு செய்ய, டூபிளெஸ்ஸி ஸ ýம், மைக் ஹசியும் சென்னையின் இன்னிங ் ûஸத் தொடங்கினர். 4 பந்துகளைச் சந்தித்த டூபிளெஸ்ஸிஸ் 3 ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து களம் கண்ட ரெய்னா வந்த வேகத்திலேயே பிரெட் லீ வீசிய 4-வது ஓவரில் பிரமாண்ட சிக்ஸரை விளாசி அதிரடியைத் தொடங்கினார். இந்த ஐபிஎல் போட்டியில் முதல்முறையாக களமிறங்கிய மைக் ஹசி 18 ரன்களில் ரன் அவுட்டானார்.

பின்னர் வந்த பிராவோ 12 பந்துகளில் ஒரு சிக்ஸருடன் 12 ரன்களில் ஆட்டமிழக்க 10.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 74 ரன்களை எடுத்திருந்தது சென்னை.


இதையடுத்து கேப்டன் தோனி களம் கண்டார். சென்னை 88 ரன்களை எட்டியபோது ரெய்னாவின் விக்கெட்டை இழந்தது. 34 பந்துகளைச் சந்தித்த ரெய்னா 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து தோனியுடன் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா. சென்னை ஆமை வேகத்தில் ஆடியதால் 15.3 ஓவர்களில்தான் 100 ரன்களை எட்டியது.

13 பந்துகளைச் சந்தித்த ஜடேஜா 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, அல்பி மோர்கல் களமிறங்கினார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. தோனி 30 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 34, அல்பி மோர்கல் 8 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். கொல்கத்தா தரப்பில் காலிஸ் 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் பேட் செய்த கொல்கத்தா அணியில் மெக்கல்லம் 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, கம்பீருடன் இணைந்தார் காலிஸ். அஸ்வின் பந்தில் சிக்ஸரை அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார் காலிஸ்.

ஜகாதி வீசிய 7-வது ஓவரில் கம்பீர் தன் பங்குக்கு ஒரு சிக்ஸரை விளாசினார். இதனால் 8 ஓவரில் 50 ரன்களைக் கடந்தது கொல்கத்தா. இருவரும் நிதானமாகவே ஆடினர். கொல்கத்தா 84 ரன்களை எட்டியபோது காலிஸ் ஆட்டமிழந்தார். 31 பந்துகளைச் சந்தித்த அவர் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்தார்.

சென்னை வீரர்களின் மோசமான பீல்டிங்கால் பலமுறை வாழ்வு பெற்றார் கம்பீர். அவர் கொடுத்த கேட்சுகளை மட்டுமின்றி, பல ரன் அவுட்களையும் கோட்டைவிட்டனர் சென்னை வீரர்கள்.

கம்பீர் 43 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். 13 பந்துகளைச் சந்தித்த திவாரி 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து யூசுப் பதான் களம் கண்டார். கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டன. பிராவோ வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் கம்பீர் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

52 பந்துகளைச் சந்தித்த கம்பீர் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தார். இதையடுத்து வந்த டி.பி.தாஸ், தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரியை விளாசினார். அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைக்க, கடைசி ஓவரில் கொல்கத்தாவின் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டன.

அஸ்வின் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த பதான், 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 3 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

4- வது பந்தை எதிர்கொண்ட டி.பி.தாஸ் பவுண்டரியை விளாச 2 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி இலக்கான 140 ரன்களை எட்டியது கொல்கத்தா. டி.பி.தாஸ் 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக பதான் 12 ரன்கள் எடுத்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

Show comments