Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச பிரிமியர் லீக் T20 தொடங்குகிறது

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2012 (23:08 IST)
வெள்ளியன்று துவங்கும் வங்கதேச பிரிமியர் லீக் (பிபிஎல்) T20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தொடக்க விழா நடைபெற்றது.

முதல் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதனை இஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றன.

இந்தியாவில் ஐபிஎல் போட்டி வெற்றி பெற்றதை அடுத்து, வங்கதேசத்தில் பிபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி முதல்முறையாக நடைபெறுகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.

மேற்கிந்தியத்தீவுகளின் கிறிஸ் கெய்ல், பொல்லார்டு, தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ், இலங்கை வீரர் ஜெயசூர்யா, முத்தையா முரளிதரன், பாகிஸ்தானின் அப்துல் ரசாக் ஆகியோர் இதில் பங்கேற்பவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மற்றபடி வங்கதேச உள்ளூர் வீரர்களும் உள்ளனர். டாக்கா, சிட்டகாங் நகரில் போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 29 வரை பிபிஎல் கிரிக்கெட் நடைபெறுகிறது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிக்கு இருக்கும் வரவேற்பைப் போல, வங்கதேசத்தில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் பிபிஎல் போட்டிக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு முதல் பேட்டிங்.. குஜராத் அணிக்கு எதிராக விராத் கோஹ்லி சதமடிப்பாரா?

ஹாட்ரிக் வெற்றியை தொடுமா ஆர்சிபி? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்! - இன்று RCB vs GT மோதல்!

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

Show comments