Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெஸ்ட் டிரா- தொடரை வென்றது ஆஸ்ட்ரேலியா

டெஸ்ட் டிரா- தொடரை வென்றது ஆஸ்ட்ரேலியா
, செவ்வாய், 20 செப்டம்பர் 2011 (18:14 IST)
FILE
கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் தொடரில் இலங்கையை 1- 0 என்று வெற்றிபெற்று ஆஸ்ட்ரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் தனது வெற்றிப்பயணத்தைத் துவங்கியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் இன்று இருதரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. ஆஸ்ட்ரேலியா கேப்டன் கிளார்க்கின் சதம், மைக் ஹஸ்ஸியின் அபாரமான 93 ரன்களுடன் 488 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

332 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஆட்ட முடிவில் 7/0 என்று இருந்தது. இதன் மூலம் ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் தொடரை 1- 0 என்று கைப்பற்றியது. ஏற்கனவே ஒருநாள் தொடரை ஆஸ்ட்ரேலியா கைப்பற்றியது.

பிரைன் லாரா 3 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை மண்ணில் 688 ரன்கள் எடுத்ததற்கு அடுத்தபடியாக மைக் ஹஸ்ஸி இந்தத் தொடரில் 463 ரன்கள் விளாசி இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

வார்னே-முரளிதரன் டெஸ்ட் டிராபியைக் கைப்பற்றிய ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இலங்கை பந்து வீச்சாளர் ரங்கன்னா ஹெராத் 157 ரன்களை விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்சில் கைப்பற்றினார்.

16 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ரங்கன்னா ஹெராத் அதிக விக்கெட்டுகளை இந்த தொடரில் கைப்பற்றியவராகத் திகழ்கிறார்.

புதுமுக வீரர்களான லயான், ஷான் மார்ஷ், கோப்லேண்ட் ஆகியோர் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டனர்.

மைக் ஹஸ்ஸி ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்ததாக ஆஸ்ட்ரேலியா டெஸ்ட் தரவரிசையில் இரண்டாவது இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்காவைச் சந்திக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil