Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லார்ட்ஸ்: ஜாகீரிடம் மீண்டும் வீழ்ந்தார் ஸ்ட்ராஸ்

Webdunia
வியாழன், 21 ஜூலை 2011 (18:38 IST)
லார்ட்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உணவு இடைவேளைக்குப் பிறகு சற்று முன் ஸ்ட்ராஸ் விக்கெட்டை ஜாகீர் கான் வீழ்த்தினார். இங்கிலாந்து 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 62 ரன்கள் எடுத்துள்ளது.

83 பந்துகள் போராடி 22 ரன்களை எடுத்த ஸ்ட்ராஸ், ஜாகீர் கான் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய சற்றே உயரமாக வந்த பவுன்சரை புல் செய்ய முயன்றார்.

பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஃபைன் லெக் திசையில் நேராக இஷாந்திடம் கேட்ச் ஆனது. இஷாந்த் நகரவேண்டிய தேவை கூட ஏற்படவில்லை.

6- வது முறையாக ஸ்ட்ராஸை ஜாகீர்கான் வீழ்த்தியுள்ளார். ஸ்ட்ராஸைப் பற்றி போட்டிக்கு முன்பு ஜாகீர் கான் கூறியதை ஜாகீர் நிரூபித்து விட்டார்.

பீட்டர்சன் களமிறங்கிய முதல் பந்தே ஜாகீரின் பந்தில் ஆட்டமிழக்கத் தெரிந்தார். ஆனால் பந்து மட்டையின் விள்ம்பை உரசிக் கொண்டு சென்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments