Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவர்களை தாமதமாக வீசியதால் தோனிக்கு தடை ஆபத்து

Webdunia
ஞாயிறு, 3 ஜூலை 2011 (14:47 IST)
பந்து வீச்சாளர்கள் குறித்த நேரத்தில் ஓவர்களை வீசுவதை அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோனி உறுதி செய்வது அவசியமாகியுள்ளது. இல்லையெனில் ஒரு டெஸ்ட் போட்டிக்கு அவர் தடை செய்யப்படலாம்.

குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது.

நேற்று நடந்து முடிந்த பாரபடாஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் 3 ஓவர்கள் குறைவாக வீசினர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஓவர்களை குறித்த நேரத்தில் வீசாமல் தவறு செய்யப்பட்டது.

இப்போது ஒரே ஆண்டுக்குள் மீண்டும் ஓவர்கள் வீசுவதில் மந்தம் ஏற்பட்டுள்ளது. இப்போது மீண்டும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 6ஆம் தேதி துவங்கும் டொமினிகா டெஸ்ட் போட்டியில் இதே தவறு மீண்டும் நிகழ்ந்தால் தோனி இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தடை செய்யப்படலாம்.

2 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் குறித்த நேரத்தில் ஓவர்களை வீசாததால் இரண்டு ஓருநாள் போட்டிகளுக்குத் தடை செய்யப்பட்டார் என்று என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா vs இங்கிலாந்து… இன்று தொடங்குகிறது முதல் ஒருநாள் போட்டி!

பாகிஸ்தான் செல்ல மறுத்தார்களா ரெஃப்ரீ ஜகவல் ஸ்ரீநாத் & நடுவர் நிதின் மேனன்?

அடிச்ச அடி அப்படி… ஐசிசி தரவரிசையில் எங்கேயோ போன அபிஷேக் ஷர்மா!

எல்லா அணிகளுக்கும் ஆறுதல்… சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆஸி அணியில் நடந்த மாற்றம்!

Show comments