Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இந்தியன்ஸ் இடம் தோற்றது புனே வாரியர்ஸ்

Webdunia
வியாழன், 5 மே 2011 (09:34 IST)
சிறப்பாக ஆடி 160 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, மிகச் சிறப்பாக பந்து வீசியும், பந்தைத் தடுத்த ரன் குவிப்பைக் கட்டுப்படுத்துவதிலும் திறனை நிரூபித்த மும்பை இந்தியன்ஸ் அணி, புனே வாரியர்ஸ் அணியை தோற்கடித்து மேலும் ஒரு வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.

மும்பை பட்டேல் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பூவா தலையா வென்ற புனே அணியின் தலைவர் யுவராஜ் சிங், மும்பை இந்தியன்ஸ் அணியை களமிறக்கினார். அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களைக் குவித்தது.

அடுத்துக் களமிறங்கிய புனே வாரியர்ஸ் அணி, ஹர்பஜன் வீசிய முதல் பந்திலேயே ரைடரின் விக்கெட்டை இழந்தது. மனிஷ் பாண்டே மட்டுமே மிகச் சிறப்பாக ஆடினார். 100 ரன்களை எட்டுவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த புனே அணிக்கு யுவராஜ் ஆட்டமிழந்தது பேரிடியானது. அதன் பிறகு அந்த அணியால் எதிர்பார்க்கப்பட்ட ரன் குவிப்புத் தேவைக்கேற்றவாறு முன்னேற முடியவில்லை.

இறுதி கட்டத்தில் ராபின் ஊத்தப்பாவின் ஆட்டத்தினால் (26 பந்துகளில் 34 ரன்கள்) 139 ரன்களை எட்டி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது புனே அணி.

இந்த தோல்வியால் ஐபிஎல் லீக்கின் அடுத்த கட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது புனே வாரியர்ஸ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments