Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொல்கத்தாவு‌க்கு 4வது வெ‌ற்‌றி; டெ‌ல்‌லி‌க்கு 5வது தோ‌‌ல்‌வி

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2011 (09:45 IST)
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிய ி‌ன் ‌லீ‌க் ஆ‌ட்ட‌த்‌தி‌ல் டெ‌ல்ல‌ி டேர்டெவில்ஸ் அ‌ணியை 17 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் கொ‌‌ல்க‌த்தா நைட் ரைடர்ஸ் அ‌ணி ‌வீ‌ழ்‌த்‌தியது. இ‌து கொ‌ல்க‌த்தா அ‌ணி‌க்கு 4வது பெ‌ற்‌றியாகு‌ம். அதே சமய‌ம் டெ‌ல்‌லி‌க்கு இது 5வது தோ‌ல்‌வியாகு‌ம்.

டெல்லியில் நே‌ற்‌றிரவு நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவரிகளில் 7 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது.

அதிகபட்சமாக மனோஜ் திவாரி 47 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 61 ரன்களும், கோஸ்வாமி 22 ரன்களும், ரையான் டென் டஸ்சாட் 19 ரன்களும் எடுத்தனர்.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக் சேவாக் 23 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன்களும், ஹோப்ஸ் 25 ரன்களும் எடுத்தனர்.

கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் 19வது ஓவரை வீசிய பிரெட்லீ, வேணுகோபால் (19) உள்பட 2 பேரை ரன் அவுட் ஆக்கியதுடன், 2 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து, டெல்லியின் நம்பிக்கையை சிதைத்தார். இதன் பின்னர் கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டபோது, டெல்லி பேட்ஸ்மேன்களால் நெருங்க முடியவில்லை.

கொல்கத்தா தரப்பில் இக்பால் அப்துல்லா 3 விக்கெட்டுகளும், பாலாஜி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

7 வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணிக்கு இது 4வது வெற்றியாகும். அதே சமயம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் டெல்லி அணி 7வது லீக்கில் எதிர்கொண்ட 5வது தோல்வியாகும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடருக்கு ஆஸி அணியில் இடம்பெற மாட்டாரா பேட் கம்மின்ஸ்?

கோலி நினைக்கும் வரை அவர் டெஸ்ட் விளையாட வேண்டும்… இல்லை என்றால் இந்தியாவுக்குதான் இழப்பு – ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

டெஸ்ட் அணியில் நீடிக்க விரும்பினால் இதை செய்யுங்கள்… கோலி & ரோஹித்துக்கு ரவி சாஸ்திரி அட்வைஸ்!

மீண்டும் கேப்டன் ஆவார் கோலி?... முன்னாள் வீரரின் ஆருடம்!

மீண்டும் கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கும் தினேஷ் கார்த்திக்.. !

Show comments