Webdunia - Bharat's app for daily news and videos

Install App

205 ரன்களுக்குச் சுருண்டது வங்கதேசம்

Webdunia
வெள்ளி, 25 பிப்ரவரி 2011 (17:57 IST)
டாக்காவில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் பி-பிரிவு ஆட்டத்தில் அயர்லாந்து அணி வங்கதேச அணியை 50-வது ஓவரில் 205 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தது.

துவக்கத்தில் தமீம் இக்பால் அதிரடியில் 39 பந்துகளில் 53 ரன்களை எட்டிய வங்கதேசம் விக்கெட்டுகள் சரியத் துவங்கியவுடன் நிதான ஆட்டத்தைக் கடைபிடிக்கத் தவறியது.

ஆட்டக்களமும் மந்தமாக மாற அயர்லாந்தின் இளம் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜார்ஜ் டாக்ரெல் அபாரமான துல்லியத்துடன் பிளைட் செய்து 10 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளான முஷ்பிகுர் ரஹீமையும், மொகமட் அஷ்ரஃபுலையும் வீழ்த்தினார்.

ஆனால் போத்தா 9 ஓவர்கள் வீசி 32 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வேகப்பந்து வீச்சாளர் ஜான்ஸ்டன் 40 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முஷ்பிகுர் ரஹிம் மட்டுமே நிதானத்தைக் கடைபிடித்து 66 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களை எடுத்தார். ஆனால் இவரும் ராகிபுல் ஹஸனும் இணைந்து 18 ஓவர்களில் 61 ரன்களை மட்டுமே சேர்க்க, பொறுமை இழந்த முஷ்பிகுர் ரஹீம் ஒரு காட்டுத் தனமான ஸ்வீப்பை ஆட முயன்று டாக்ரெலிடம் வீழ்ந்தார்.

ராகிபுல் ஹஸன் 38 ரன்களை எடுக்க 69 பந்துகளை எடுத்துக் கொண்டார். கடைசியில் ரன் அவுட் ஆனார்.

கடைசியில் நயீம் இஸ்லாம் 38 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களை எடுக்க ஓரளவுக்கு சவாலான 205 ரன்களை வங்கதேசம் எட்டியது.

ஆட்டக்களம் சுத்தமாக மந்தமாக இருப்பதால் வங்கதேச ஸ்பின்னர்களான அப்துர் ரசாக், ஷாகிபல் ஹஸன் ஆகியோரை அயர்லாந்து சமாளிக்க வேண்டி வரும்.

பிட்சை வைத்துப் பார்க்கும் போது இது ஒரு நெருக்கமான போட்டியாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

Show comments