Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முனாஃப் படேல் அபாரம்; இந்தியா வெற்றி

Webdunia
சனி, 19 பிப்ரவரி 2011 (22:16 IST)
webdunia photo
FILE
டாக்கா, மிர்பூர் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை முதல் கிரிக்கெட் போட்டியில் சேவாகின் அடிரடி 175 ரன்களும், கோலியின் அபார சதமும், பந்து வீச்சில் முனாஃப் படேலின் 4 விக்கெட்டுகளும், ஜாகீர், ஹர்பஜன் ஆகியோரது அபாரப் பந்து வீச்சும் இந்திய அணிக்கு வங்கதேசத்திற்கு எதிராக 87 ரன்கள் வித்தியாச வெற்றியைப் பெற்றுத்தந்தது.

371 ரன்கள் இலக்கை எதிர்த்து வங்கதேச அணி 50 ஓவர்கள் விளையாடி 9 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்களையே எடுக்க முடிந்தது.

அந்த அணியின் இம்ருல் கயேஸ் துவக்கத்தில் ஸ்ரீசாந்தின் ஒரே ஓவரில் 24 ரன்களைக் குவிக்க 30 பந்துகளில் 50 ரன்களை எட்டி அச்சுறுத்தியது. 10 ஓவர்களில் 68 ரன்களை எட்டியது. 15 ஓவர்களில் 93 ரன்களை எட்டியது.

ஆனால் அதன் பிறகு ஹர்பஜன் சிங், யூசுப் பத்தான் வீசிய 11 ஓவர்களில் ஒரு பவுண்டரியைக் கூட வங்கதேசத்தால் அடிக்க முடியவில்லை.

அதன் பிறகு தமீம் இக்பால் சற்றே மந்தமாக விளையாடி அரை சதம் எடுத்தார். ஆனால் அதற்கு அடுத்த படியாக அவர் யுவ்ராஜ் சிங்கை மிகப்பெரிய சிக்சர் அடித்து அடிக்கும் மூடிற்கு வந்தார். ஆனால் 70 ரன்கள் எடுத்த போது மீண்டும் முனாஃப் படேல் பந்து வீச அழைக்கப்பட ஓவர் பிட்ச் பந்தை சரியாக அடிக்காமல் மிட்விக்கெட்டில் இருந்த யுவ்ராஜிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அப்போது 32 ஓவர்களில் 188/3 என்று இருந்தபோது 18 ஓவர்களில் சுமார் 190 ரன்கள் என்று ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது.

கேப்டன் ஷாகிப் அல் ஹஸன் அபாரமாக விளையாடி 50 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து யூசு பத்தான் பந்தில் ஹர்பஜனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வங்கதேச அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது. முஷ்பிகுர் ரஹிம் 25 ரன்கள் எடுத்து ஜாகீர் கானிடம் வீழ்ந்தார். ராகிபுல் ஹஸன் 28 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

வங்கதேசம் 9 விக்கெட்டுகளுக்கு 283 ரன்கள் என்று முடிந்து போனது.ல்

இந்திய அணியில் முனாஃப் படேல் 10 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ஜாகீர் கான் 40 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங், யூசுப் பத்தான் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஸ்ரீசாந்திற்கு மறக்கப்படவேண்டிய பந்து வீச்சாக இன்று அமைந்தது. வங்கதேச்க் கேப்டன் டாஸின் போது கூறிய படி 260 ரன்கள் வரை துரத்தி வெற்றி பெற முடியும் என்றார். அதனை அவர்கள் செய்து காட்டினர்.

இதனால் மற்ற அணிகள் வங்கதேசத்தை, அவர்கள் மண்ணில் எதிர்கொள்ளும் போது எச்சரிக்கையுடன் விளையாடுவது நல்லது. குறிப்பாக இங்கிலாந்தும், மேற்கிந்திய தீவுகளும் கவனமாக இருப்பது நல்லது. அதாவது இன்று இலக்கு 300 ரன்கள் என்று இருந்திருந்தால் வங்கதேசம் வெற்றியைக் கூட சாதித்திருக்கலாம். 370 ஒரு போதும் முடியாத இலக்கு என்று இன்று தெரிந்தது.

முன்னேற்றம் தேவை என்று கூறுகிறார் தோனி, ஃபீல்டிங் மேம்படவேண்டும் என்பது முக்கியம் என்றார். ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல வெற்றிதான், இருப்பினும் சில இடங்களில் மேம்பாடு தேவை என்கிறார் தோனி.

140 பந்துகளில் 14 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 175 ரன்கள் எடுத்த விரேந்திர சேவாக் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

நாளைய போட்டியில் கென்யாவும் நியுஸீலாந்தும் ஒரு போட்டியிலும், இலங்கையும், கனடாவும் மற்றொரு போட்டியிலும் மோதுகின்றன.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

களத்தில் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும்.. கோலி குறித்து சஞ்சய் பாங்கர் கருத்து!

பயிற்சியின் போது இடது காலில் காயமான ரோஹித் ஷர்மா… வைரலான புகைப்படம்!

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

ஜாகீர் கானை பாக்குற மாதிரியே இருக்கு! சிறுமி பந்து வீசும் வீடியோவை ஷேர் செய்த சச்சின் டெண்டுல்கர்!

சாம்பியன்ஸ் ட்ராபி விவகாரம்; பாகிஸ்தானுக்கு ரூ.38 கோடி வழங்கும் ஐசிசி! - ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

Show comments