Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸி. தேர்வாளர்களே காரணம் - பாய்காட் குற்றச்சாற்று

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2011 (16:16 IST)
நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் ஆஸ்ட்ரேலியா 1- 3 என்ற டெஸ்ட் கணக்கில் தோல்வி தழுவவுள்ளதையடுது இங்கிலாந்து முன்னாள் வீரரும் தற்போதைய கிரிக்கெட் பகுப்பாய்வளருமான ஜெஃப் பாய்காட் ஆஸ்ட்ரேலிய அணித் தேர்வுக் கொள்கையில் குழப்பங்களே அணியின் சீரழிவுக்குக் காரணம் அன்று கூறியுள்ளார்.

ஆஸ்ட்ரேலிய வானொலிக்கு அவர் அளித்துள்ள ப ேT Tஇயில் கூறியிருப்பதாவது:

" சுழற்பந்து வீச்சாளர் நேதன் ஹாரிட்ஸை கடைசி நேரத்தில் அணியிலிருந்து நீக்கியது, போலிஞ்சர்தான் ஆஸ்ட்ரேலியாவின் முன்னணி விக்கெட் எடுப்பவராக கடந்த 12மாதங்களாக இருந்துவந்தார். அவர் காயமடைந்தார் அது சரி, ஆனால் அவர் பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடி பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு தன்னை தயார் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் அதனை நீங்கள் தடுத்து விட்டீர்கள். அவருக்கு ஓய்வு தேவை என்றீர்கள் ஆனால் அவரை அதன் பிறகு தேர்வு செய்யவேயில்லை.

இது குழப்பத்தை வெளிப்படுத்துவதாய் உள்ளது. அங்கிருந்து எல்லாமே மோசமாகப் போய் முடிந்தது.

எப்போதும் பேட்ஸ்மென்கள் அதிக ரன்களை எடுத்தால்தான் பந்து வீச்சாளர்கள் திறமையாக வீச முடியும், ஆனால் ஆஸ்ட்ரேலிய வீரர்களால் தொடர்ந்து நல்ல ரன் எண்ணிக்கையை பெற முடியவில்லை.

இந்தத் தொடரில் போதுமான ரன்களை ஆஸ்ட்ரேலியா எடுக்கவில்லை அதனால் எந்த வித பந்து வீச்சு கலவையை வைத்திருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. இதுதான் ஆஸ்ட்ரேலிய வீழ்ச்சியின் சாராம்சம்." இவ்வாறு கூறினார் பாய்காட்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாட்டில் அதிரடி காட்டும் இந்தியா! தொடர்ந்து முதலிடம்!

பயிற்சியின் போது வெறித்தனமாக விளையாடிய கோலி… ஓய்வறையை பதம் பார்த்த சிக்ஸ்!

ஓய்வு பெறுகிறாரா அஸ்வின் ரவிச்சந்திரன்? அவரே அளித்த தகவல்..!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: பரபரப்பான இந்தியா - பாகிஸ்தான் போட்டி.. யாருக்கு வெற்றி?

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

Show comments