Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டிங்கை நீக்கியிருக்க வேண்டும் - இயன் சாப்பல்

Webdunia
புதன், 29 டிசம்பர் 2010 (13:00 IST)
மெல்போர்ன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2ஆம் நாள் ஆட்டத்தின் போது நடுவர்களிடம் வாக்குவாதம் புரிந்த ஆஸ்ட்ரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கை வெறும் அபராதத்துடன் தப்பவிட்டது தவறு அவரை போட்டியிலிருந்து நீக்கியிருக்கவேண்டும் என்று முன்னாள் ஆஸ்ட்ரேலிய கேப்டன் இயன் சாப்பல் கடுமை காட்டியுள்ளார்.

" நான் விளையாடும் போது, ஒருவர் கிரிக்கெட் விதிமுறைகள் குறித்து நடுவரிடம் விவாதிக்கலாம் ஆனால் நடுவர் தீர்ப்பை எதிர்த்து வாக்குவாதம் செய்தது கிரிக்கெட் விதிகளின் படி குற்றமாகும். இது போட்டியிலிருந்து நீக்கப்படவேண்டிய குற்றமாகும்.

அவர் ஏதோ இதனை முதன் முறையாகச் செய்தார் என்று சலுகை காட்டும் நடத்தை அல்ல இது. ஐ.சி.சி.யும் இதற்கு பாதி பொறுப்பு. இது போன்ற நடத்தைகளை நிறுத்த வேண்டும்மென்றால் ஐ.சி.சி. நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் முறைதான் நடக்கிறது என்றாலும் முதல் முறையே கடுமை காட்டினால் மற்றொரு முறை நடக்காது." என்றார் இயன் சாப்பல்.

முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான மார்க் டெய்லரும் பாண்டிங்கின் செயல் அத்துமீறல் என்றார்.

" நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு முறை அமலில் உள்ளது. அது கேட்கப்பட்டு ரீ-பிளேக்கள் பார்க்கப்பட்டு பீட்டர்சன் நாட் அவுட் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆட்டத்தைத் தொடர வேண்டியதுதானே? மேலே கொடுக்கப்பட்ட தீர்ப்பை நடுவர்கள் மீண்டும் ஒருமுறை கூறுகின்றனர். இதில் அவர்களிடம் வாக்குவாதம் புரிவது அனாவசியம். சரியான தீர்ப்புக்கு நடுவர்களிடம் சண்டையிடுவது அநாகரீகம்." என்றார் டெய்லர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரை இந்தியாவுக்கு மாற்ற பேச்சுவார்த்தையா?

சிறுபிள்ளைத்தனமாக இந்தியா நடந்துகொள்கிறது… கண்டனத்தைத் தெரிவித்த பாகிஸ்தான் பவுலர்!

அரசன் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட பகுதிக்குள் நுழைந்துவிட்டார்… கோலியைப் புகழ்ந்த ரவி சாஸ்திரி

ஐபிஎல் பவுலர்களுக்கு நான்கு ஓவர்களுக்கு மேல் வீசத் தெரியாது… ஷமியைப் புகழ்ந்த பெங்கால் அணிக் கேப்டன்!

யுவ்ராஜ் தந்தையின் விமர்சனத்துக்கு பதிலளித்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர்!

Show comments