Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருபது ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் மீண்டும் தோல்வி

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2010 (15:26 IST)
ஹேமில்டனில் நடைபெற்ற பாகிஸ்தான், நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 ஒவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் தோல்வி தழுவியது.

முதலில் பேட் செய்த நியூஸீலாந்து 20 ஓவர்களில் 185 ரன்கள் குவிக்க, பதிலுக்கு பாகிஸ்தான் 146 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் இருபது ஓவர் தொடரை 2- 0 என்று நியூஸீலாந்து கைப்பற்றியது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் ஃபீல்டிங்கைத்தேர்வு செய்தது. ஜெஸ்ஸி ரைடர் 0-இல் ரசாக்கிடம் ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பிறகு ஜோடி சேர்ந்த கப்தில், பிரங்கிளின் ஸ்கோரை அதிரடி முறையில் 91 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். அதாவது 11 ஓவர்களில் ஸ்கோர் 91 ரன்களை எட்டியது. கப்தில் 28 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பிராங்கிளின் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் அதன் பிறகு ஸ்காட் ஸ்டைரிஸ் 14 பந்துகளில் 3 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 34 ரன்களை விளாசினார்.

ராஸ் டெய்லர் 30 ரன்களையும் மெக்லாஷன் 26 ரன்களையும் விளாச 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன்களை எடுத்தது நியூஸீ.

இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் துவக்கத்தில் ஷாகித் அஃப்ரீடியை இழந்து விடவே மொகமட் ஹபீஸ் மட்டுமே அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார்.

அதன் பிறகு நேதன் மெக்கல்லம் 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தான் இலக்கை எட்டவே முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டது.

ஆட்ட நாயகனாக நேதன் மெக்கல்லம் தேர்வு செய்யப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்.. 10 விக்கெட் வித்தியாசத்தில் தெ.ஆ. வெற்றி..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனைப் படைத்த பேட் கம்மின்ஸ்!

ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகும் ஜெய்ஸ்வால்?

நமக்கு சூப்பர் ஸ்டார்கள் தேவையில்லை… அவர்கள் வீட்டிலேயே இருந்து கொள்ளட்டும் – ஹர்பஜன் சிங் காட்டம்!

கோலி இப்போது இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. நண்பர் டிவில்லியர்ஸ் அறிவுரை!

Show comments