Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திராவிட் 200-வது கேட்ச்; தென் ஆப்பிரிக்கா 103/7

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2010 (17:23 IST)
டர்பன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் ஆகியோரது அபாரப் பந்து வீச்சினால் தென் ஆப்பிரிக்க அணி தன் முதல் இன்னிங்ஸில் 103 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

கடைசியாக டேல் ஸ்டெய்ன் ரன் எடுக்காமல் ஹர்பஜன் வீசிய தூஸ்ராவை விளையாட அது விளிம்பில் பட்டு திராவிடிடம் சென்றது. இடது கை வாக்கில் சென்ற பந்த பந்தை பக்கவாட்டில் பாய்ந்து அபாரமாகப் பிடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 கேட்ச்களை பிடித்து நம்பர் 1 ஆகத் திகழ்கிறார்.

டீவிலியர்ஸுக்குப் பிறகு அபாய வீரர் அம்லாவை ஹர்பஜன் சிங் தூஸ்ராவில் எல்.பி.டபிள்யூ. செய்தார். அம்லா அந்தப் பந்தை ஸ்வீப் செய்ய முயன்றார் முடியவில்லை.

ஆஷ்வெல் பிரின்ஸை ஏற்கனவே ஜாகீர் கான் ஆட்டிப்படைத்து விட்டார். அதனால் அவருக்கு வெளியே செல்லும் பந்து உள்ளே வரும் பந்து எது என்பதில் குழப்பம் நீடித்தது. அப்படிப்பட்ட ஒரு பந்தை பிரின்ஸ் ஆட முயன்றார் பந்து மட்டையில் பட்டு ஸ்டம்ப்களைத் தாக்கியது.

கடைசியாக பால் ஹேரிஸ், ரன் எடுக்காமல் ஹர்பஜன் சிங் பந்து ஒன்று நின்று திரும்ப அதனை புஜாராவிடம் கேட்ச் கொடுத்தார்.

ஹர்பஜன் சிங் 4 ஓவர்கள் 2 மைடன்கள் 2 ரன்கள் 3 விக்கெட்டுகள். ஜாகீர் கான் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள், ஸ்ரீசாந்த் ஒரு விக்கெட்.

தற்போது தென் ஆப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்துள்ளது. மார்க் பௌச்சர் 3 ரன்களுடனும், மோர்கெல் ரன் எதுவும் எடுக்காமலும் விளையாடி வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

Show comments