Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவு இடைவேளை: தென் ஆப்பிரிக்கா 74/4

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2010 (15:42 IST)
டர்பன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்ஸில் 2ஆம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது 4 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்கள் எடுத்துள்ளது.

முதலில் ஸ்மித் 2 பவுண்டரிகளுடன் 9 ரன்கள் எடுத்திருந்தபோது ஜாகீர்கான் ஒரு இன்ஸ்விங்கரை வீச அது ஸ்மித்திற்கு அவுட் ஸ்விங்கராஅக அவர் வேறு வழியில்லாமல் அதனை ஆட முற்பட பந்து மட்டையின் விளிம்பில் பட்டு தோனியிடம் சென்றது.

துவக்க ஓவர்களை படு மோசமாக வீச்ய ஸ்ரீசாந்த் தன் இரண்டாவது ஸ்பெல்லை சிறப்பாக வீசினார்.

அல்விரோ பீட்டர்சன் இவர் ஸ்ரீசாந்த் மூலம் நல்ல துவக்கத்தைப் பெற்றார். ஆனால் லெக் ஸ்டம்பிலிருந்து நகர்ந்து ஆடும் இவரது பழக்கத்தை உணர்ந்த ஜாகீர் ஒரு பந்தை லெக் ஸ்டம்புக்கு நேராக சற்றே இழுத்து விட்டார். பந்து லெக் ஸ்டம்பைத் தட்டியது.

அதன் பிறகு ஜாக் காலிஸ் - அபாய வீரர்- 2 பவுண்டரிகளை அடித்த நிலையில் துரரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார்.

அதாவது அம்லா நேராக ஒரு ஷாட்டை ஆட அதனை தடுக்க முயன்ற இஷாந்தின் கையில் பட்டு பந்து ஸ்டம்ப்களைத் தாக்கியது. காலிஸ் ஓரிடு அங்குலங்கள் வெளியே இருந்தார். அவுட்டானார்.

அடுத்ததாக ஏ.பி.டிவிலியர்ஸுக்கு அபாரமான ஒரு லெக் கட்டரை வீசினார் ஸ்ரீசாந்த் அவர் கிட்டத்தட்ட திராவிட் போலவே அதனை ஆட பந்து தோனியிடம் கேட்சாகச் சென்றது.

தற்போது அம்லா அபாரமான 5 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்தார் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்: அதிரடி அறிவிப்பு..!

தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதில் வருத்தம்தான்… RCB வீரர் யாஷ் தயாள் கருத்து!

டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டனாக நீங்கள் இருக்கிறீர்கள்… கோலியைப் பாராட்டிய கம்பீர்!

கோலி- கம்பீர் உரையாடல் வீடியோவை வெளியிட பிசிசிஐ திட்டம்!

RCB அணிக்காக அதை செய்யவேண்டும் என்பது என் ஆசை- ஆலோசகர் பொறுப்பேற்கும் தினேஷ் கார்த்திக்!

Show comments