Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிராட் அபார சதம்; இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள்

டிராட் அபார சதம்; இங்கிலாந்து 5 விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள்
, திங்கள், 27 டிசம்பர் 2010 (13:10 IST)
மெல்போர்னில் நடைபெறும் ஆஸ்ட்ரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்து ஜொனாதன் டிராட்டின் அபாரமான சதத்துடன் 5 விக்கெட் இழப்புக்கு 444 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தத் தொடரில் தன் 2-வது சதத்தை எட்டிய டிராட் ஆட்ட முடிவில் 144 ரன்களுடனும் விக்கெட் கீப்பர் மேட் பிரையர் 75 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

157/0 என்று துவங்கிய இங்கிலாந்து இன்று சுமார் 287 ரன்களை விளாசியுள்ளது. இன்று வந்தவுடன் குக் 82 ரன்களில் பீட்டர் சிடில் பந்தில் ஆட்டமிழந்தார்.

அவர் 11 பவுண்டரிகளை அதில் அடித்திருந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் சிடிலின் அபாரமான பௌன்சருக்கும் ஹஸ்ஸியும் அபார கேட்சிற்கும் ஸ்ட்ராஸ் 69 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் ஏற்கனவே ஆட்டம் பாண்டிங்கின் கையிலிருந்து பிடுங்கப்பட்டு விட்டது. பீட்டர்சனும் டிராட்டும் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 92 ரன்களைச் சேர்த்தன்னர். கெவின் பீட்டர்சன் 7 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து சிடில் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

அதன் பிறகுதான் இங்கிலாந்து சற்றே பின்னடைவைச் சந்தித்தது. பால் காலிங்வுட், இயன் பெல் ஆகியோர் மோசமான ஹுக் ஷாட்டிற்கு மிட்செல் ஜான்சனிடம் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். ஜான்சன் இவர்களை வீழ்த்தினார்.

2986/5 என்ற நிலையில் மேட் பிரையர் ஜான்சன் பந்தை எட்ஜ் செய்தார் அது கேட்சும் பிடிக்கப்பட்டது. ஆனால் நடுவர் அலீம் தாருக்கு சந்தேகம் எழ மூன்றாவது நடுவரை அழைத்தார். அப்போது ஜான்சன் வீசியது நோ-பால் என்று தெரியவந்தது.

அதன் பிறகு டிராட், பிரையர் சில அபாரமான பவுண்டரிகளை அடித்தனர். குறிப்பாக ஆஸ்ட்ரேலிய சுழற்பந்து வீச்சு ஒன்றுமேயில்லாமல் இருந்தது. ஹேரிஸ், ஹில்ஃபென் ஹாஸ் ஆகியோர் பந்து வீச்சில் விக்கெட் எடுக்கும் தன்மை இல்லை.

இதனால் 40 ஓவர்களில் டிராட்டும், பிரையரும் ஆட்டமிழக்காமல் 6-வது விக்கெட்டுக்காக 158 ரன்களைக் குவித்தனர்.

டிராட் தனது 141 ரன்களில் 12 பவுண்டரிகளை அடிக்க, மேட் பிரையர் 75 ரன்களில் 10 பவுண்டரிகளை விளாசினார்.

பீட்டர் சிடில் 3 விக்கெட்டுகளையும், ஜான்சன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Share this Story:

Follow Webdunia tamil