Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சவுதி ஹாட்ரிக் - நியூஸீலாந்து வெற்றி

சவுதி ஹாட்ரிக் - நியூஸீலாந்து வெற்றி
, திங்கள், 27 டிசம்பர் 2010 (10:24 IST)
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி, 2 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக நியூசீலாந்து சென்றுள்ளது.

பாகிஸ்தான்-நியூசீலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. நியூசீலாந்து அணி கேப்டன் டெய்லர் `டாஸ்' ஜெயித்து பாகிஸ்தான் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார்.

நியூசீலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதியின் அபார பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி தடுமாற்றம் கண்டது. அபாரமாக பந்து வீசிய டிம் சவுதி 8-வது ஓவரின் 2-வது பந்தில் ïனிஸ்கானையும் (2 ரன்), 3-வது பந்தில் முகமது ஹபீசையும் (24 ரன்), 4-வது பந்தில் உமர் அக்மலையும் (0) வீழ்த்தி `ஹாட்ரிக்' சாதனை படைத்தார். அதோடு அவர் தனது முந்தைய ஓவரில் அகமது ஷெனாட்டையும் (14 ரன்), பிந்தைய ஓவரில் அப்துல் ரசாக்கையும் (1 ரன்) சாய்த்தார்.

இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் நிïசிலாந்து வீரர் என்பதுடன் `ஹாட்ரிக்' சாதனை படைத்த 3-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வகாப் ரியாஸ் 30 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்றொரு வீரர் உமர்குல் 30 ரன் சேர்த்தார். நியூசிலாந்து பந்து வீச்சாளர் மில்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 17.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்டின் குப்தில் 29 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 54 ரன் எடுத்தார். 23 பந்துகளில் அரை சதத்தை கண்ட குப்தில் 20 ஓவர் போட்டியில் வேகமான அரை சதம் அடித்த முதல் நிïசிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்தார். கேப்டன் டெய்லர் 31 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 39 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

பாகிஸ்தான் அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டன் ஓவருடன் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்திய நிïசிலாந்து வீரர் டிம் சவுதி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

நியூசிலாந்து-பாகிஸ்தான் இடையேயான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நாளை (28-ந் தேதி) நடக்கிறது.

சர்வதேச 20 ஓவர் போட்டியில் `ஹாட்ரிக்' சாதனை படைத்தவர்கள் விவரம் வருமாறு:-

பிரெட்லீ ஆஸ்திரேலியா வங்காளதேசம் கேப்டவுன் 2007

ஜேக்கப் ஓரம் நியூசீலாந்து இலங்கை கொழும்பு 2009

டிம் சவுதி நியூசிலாந்து பாகிஸ்தான் ஆக்லாந்து 2010

Share this Story:

Follow Webdunia tamil