Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலத்திற்கேற்ப ஆடுவதுதான் சச்சினின் வெற்றி- தோனி

Webdunia
சனி, 25 டிசம்பர் 2010 (12:00 IST)
சச்சின் டெண்டுல்கர் நவீன காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விளையாடுவது டான் பிராட்மேனைவிட சிறப்பாக சாதனை புரியக் காரணம் என கருதுவதாக இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.

பிராட்மேன், சச்சின் பேட்டிங் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தோனி அளித்த பதில்:

அவர்கள் இருவரையும் ஒப்பிடமுடியாது. பிராட்மேன் விளையாடி காலம் வேறு, சச்சின் விளையாடும் காலம் வேறு. அவர்கள் இருவரும் சிறந்த பேட்ஸ்மேன்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் சச்சின் 21 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் திகழ்வதற்கு காரணம், அவர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விளையாடுபவர். அவர் இப்போது அணியில் இருப்பது மற்ற வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறது என்று கூறிய தோனி, குவாலியர் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் இரட்டைச் சதம் அடித்ததையும் நினைவுகூர்ந்தார்.

கிரிக்கெட்டின் பிதாமகர் என்றழைக்கப்படும் டான் பிராட்மேன் 2001-ம் ஆண்டு தனது 92-வது வயதில் மறைந்தார். 52 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவரின் சராசரி 99.94 என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜாவின் அபார பந்துவீச்சு. 9 விக்கெட்டுக்களை இழந்து நியூசிலாந்து திணறல்..!

ஷுப்மன் கில் & ரிஷப் பண்ட்டின் சிறப்பான ஆட்டத்தால் 28 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா… !

ரிஷப் பண்ட் அதிரடி… ஷுப்மன் கில் நிதானம்… சரிவில் இருந்து மீண்ட இந்திய அணி!

இந்தியாவுக்காக அதிக விக்கெட்கள்… புதிய உச்சத்தைத் தொட்ட ஜடேஜா!

தோனி, கோலி இல்ல… ஐபிஎல் வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கிய வீரர் இவர்தான்!

Show comments